எங்கே போனாலும் நம்ம கண்ணுலேயே எல்லாம் படுது..எக்ஸாம் எழுத போன இடத்துல கூட..
எக்ஸாம் ரூமுக்கு முன்னாடி, கும்பலா கொஞ்ச பேர், தனியா தனியா கொஞ்ச பேர் இப்படி எல்லாம் உட்காந்து படிச்சுகிட்டு இருப்பாங்க. பார்த்திருப்பீங்க.
அப்படி ஒரு கும்பல இரண்டு நாளா எக்ஸாம் ஹால்ல பார்த்துகிட்டு இருக்கேன்.
ஒரு ஆளு, ஆறு ஏழு பொம்பளங்க அல்லது பொம்பள பிள்ளைங்க (கல்யாணம் ஆனவங்களும் ஆகாதவங்களும்) வட்டம் கட்டி உட்கார்ந்து படிக்கிறாங்களோ இல்லையோ அரட்டை..
எல்லார்கிட்டேயும் உரசிகிட்டும் சிரிச்சுகிட்டும் பேசிகிட்டு இருந்தார் அந்த ஆளு. அவளுங்களும் அப்படிதான். வீட்டை விட்டு வெளியே வந்தா, வீட்டுக்காரரை மறந்துருவாங்க போல..
அதுல ஒரு பொம்பளை மட்டும் சிரிக்காம கொஞ்சம் உம்முனு இருந்தாங்க. அவங்க நடந்துகிறதுல இருந்தே தெரிந்தது, அவங்க அந்த ஆளோட மனைவின்னு. ரெண்டு பேரும் பரிட்சை எழுத வந்திருக்காங்க போல.
மூணாவது நாளும் இப்படி கெக்கெபெக்கென்னு சிரிச்சுகிட்டு இருந்தப்போ, ஒரு invigilator கட்டு பேப்பரோட வந்தாங்க. என்ன கடுப்பில இருந்தாங்களோ தெரியல, பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க.
'இது என்ன பீச்சா..காத்து வாங்கவா வந்துருக்கீங்க? இரண்டு நாளா பார்த்துகிட்டுதான் இருக்கேன், படிக்கிற இலட்சணமே இல்லையே. எக்ஸாம் எழுத வந்த மாதிரியே தெரியலையே. இது காலேஜ். ரூம் போட்டு செய்ற வேலையெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்கன்னு' ஒரு மிரட்டு மிரட்ட, அப்படியே அவனும் அவன்கூட கடலை போட்டுகிட்டு இருந்தவளுங்களும் கப்சிப்..
Invigilator சத்தம் போட்டதிலிருந்து ஒன்னு மட்டும் புரியுது, படிப்பின் மீதும் ஒழுக்கத்தின் மீதும் நம் சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கை பெரிதாய் குலையவில்லை என்பது. Correspondence exams தானே, நமக்கென்னன்னு இருக்காமல், படிக்கிற இடத்துல ஒழுக்கத்தை முதன்மைபடுத்தியதற்கு ஒரு சபாஷ் சொல்லணும் அவங்களுக்கு.
அவன் மனைவி முகத்தைப் பார்த்தேன். அப்படி ஒரு புன்முறுவல்....இல்லைங்க, இதுக்கு பேர்தான் பொன்முறுவல்...
அருமை
ReplyDeleteநன்றி :)
Deleteசிந்திக்க வைக்கும் பதிவு
ReplyDeleteபடிப்புக்கும் ஒழுக்கத்திற்குமான
பிணைப்பு குறைந்து கொண்டுதான் உள்ளது
பகிர்ந்த விதம் அருமை
மிக்க நன்றி அய்யா
Deleteபடிப்பும் ஒழுக்கமும்..- அருமை. சரியான கருத்துகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திருமதி Ahila Puhal
ReplyDeleteமகிழ்ச்சி அய்யா..
Delete