சமீபத்தில் வந்த ஓரு
விழாவுக்கான அழைப்பிதழில், 'விதவையர் நல சங்கம்'
என்ற சொற்கள் கண்ணில்
பட்டது.
விதவை என்னும்
சொல் மனதுள் ஒரு சிறு கோபம் கலந்த வருத்தம் தோற்றுவித்ததை
மறுப்பதற்கில்லை. விதவை என்னும் சொல்லை ஒழித்து குடும்பத்திற்கான நல சங்கமாக
மாற்றலாம். அந்த பெண்களை மட்டும் குறிக்க வேண்டுமானால், அவளை பெண் என்பதை
பறைசாற்றும் வேறு சொற்களைக் கொண்டு அடையாளப்படுத்துங்கள்.
துணைவியர்,
இல்லத்தரசிகள் என்று நிறைய சொற்கள் இருக்கும்போது இன்னும் எதற்கு அந்த சொல்? இல்லையென்றால்,
இவை, துணைவியார், இல்லத்தரசி போன்ற சொற்கள், இந்து ஆகம சட்டத்தின் படி சுமங்கலிகளை
மட்டுமே குறிக்கும் சொற்களா என்ன.. கணவனை இழந்தால் அந்த பெண்கள் வாழ தகுதியற்று
போய்விட்டார்களா என்ன.
திருமணம்தான் ஒரு
பெண்ணை, அவள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால், அதையும் ஆண், பெண் இருவருக்கும்
பொதுவில் வைப்போம். அதை நடைமுறையில் சாத்தியபடுத்த விரும்பாதவர்களால்தான் பெண்கள் மட்டும்
பலியாகிறார்கள்.
மறுமணங்கள்
புழக்கத்தில் இருக்கும் இந்த காலகட்டத்திலும், பெண்களை விதவை என்று இவ்வாறு முத்திரை குத்தும்
பழக்கம் இன்னும் முடியவில்லை. ஆணை விட பொருளாதாரத்தில் பெண் பின்தங்கியிருக்கும்
வரை இது தொடரும் என்றே தோன்றுகிறது.
இன்று கணவனை
இழந்த பலர் கைத்தொழில் மற்றும் வீட்டு வேலைகள் செய்து சுயமாய் வாழ்கிறார்கள்.
அப்போது அவளும் ஆணைப் போலவே சுயமாய் வாழ உரிமை இருக்கிறது அல்லவா. அப்புறம்
எதற்காக பழைய வாழ்க்கையின் இழப்பை சொல்லிக்காட்டும் சொற்கள்.. அவளாக அவனோடு வாழ்ந்த
வாழ்க்கையின் நினைவுகளோடு மனதால் வாழ்வது வேறு. சமூகமாக சேர்ந்து ஒரு சொல்லைக்
கொண்டு அவளை வாழ தகுதியற்றவள் என்பது வேறு.
விதவை, கைம்பெண் என்பதன் ஆண்பாற் சொல் தபுதாரன் என்பது.
அது வழக்கொழிந்து போனது. காரணம், ஆண்கள், மனைவியின் மறைவுக்கு பின், பிற பெண்களை மணந்து கொண்டதாலும், மனைவி உயிருடன் இருக்கும்போதே பல பெண்களை
மணந்து கொள்வதாலும் தபுதாரன் என்ற இச்சொல் வழக்கொழிந்து போய்விட்டதாய் நூல்கள்
சுட்டுகின்றன.
இந்து தர்ம
சாஸ்திரம் கூறுவதுபடி, திருமணம் ஆகாமலே
ஒரு பெண்ணுடன் வாழ்பவன், மனைவியை இழந்தவன்
இவர்களை சுபகாரியங்களில் முன்னிறுத்தக்கூடாது. இதையெல்லாம், பெண்களுக்கு மட்டும்
சாத்திவிட்டு, ஆண்கள் இந்த வழக்கத்தில் இருந்து எல்லாம்
விடுதலை பெற்றுக்கொண்டார்கள்.
இன்றும் கணவன்
இழந்த பெண்கள் தன் பிள்ளைகளின் திருமண சபைக்கு கூட வர இயலாதவராய் தூணுக்கு பின்
நிற்கும் நிலை பல ஊர்களில் இருக்கின்றன. பட்டபடிப்பு முடித்து வீட்டில் அடைப்பட்டுப்
போன ஒரு பெண்ணால் கூட இந்த விஷயத்தில் அவளாகவே சுயமாய் நிமிர முடிவதில்லை. அந்த
அளவுக்கு அவளின் அடி மனதில் கற்கள் கொண்டு கட்டப்பட்டு பலமாய் அஸ்திவாரம்
போடப்பட்டுள்ளது சமுகத்தால்.
அதிகமாய்
பெண்களிடையேதான் விழிப்புணர்வு தேவைபடுகிறது. ராஜாராம் மோகன்ராய் ஒழித்த உடன்கட்டை
ஏறுதல் போன்ற சாபக்கேடுகளைப் போலவே இந்த சொற்களும் அதன் பின் நடைபெறும் அமங்கலமான
நிகழ்வுகளும் இருக்கின்றன.
யாராவது ஒரு ஆண்
இறந்தால், ஊரில் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கும்
ஆண்களுக்கும் பொழுதுபோக்க, அந்த பெண்ணை அதன்பின் வரும் நாட்களில் துன்புறுத்தி
பார்க்கும் நிகழ்வுகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. பல வீடுகளில் பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள் வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுப்பதால் சற்று குறைந்து, இப்போது அங்கொன்றும்
இங்கொன்றுமாய் நடக்கிறது.
பழமைவாத சொற்கள் கொண்டு பெண்களை ஒரு சட்டத்துக்குள்
அடைப்பதை முடிவுக்குக் கொண்டுவர பிரயத்தனப்படுவோம். கணவன் இறந்தாலும் தன் சுயம்
இறப்பதில்லை என்பதை பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
நம் பெண்கள்
கடக்கவும், போராடவும்,
இன்னும் காததூரம் அல்ல,
நெடுந்தொலைவு உள்ளது. அதுவரை
வலிமையையும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு கொடுப்போம்.
//இன்றும் கணவன் இழந்த பெண்கள் தன் பிள்ளைகளின் திருமண சபைக்கு கூட வர இயலாதவராய் தூணுக்கு பின் நிற்கும் நிலை பல ஊர்களில் இருக்கின்றன.//
ReplyDeleteஇது மிகப்பெரிய கொடுமை. அந்த பெற்ற தாயாரைவிட உள்ளன்புடன் அந்த மணமக்களை வேறு யாரால் மனதார வாழ்த்த முடியும்?
சமுதாயத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.முன்புபோல இல்லாமல் கொடுமைகள் குறைந்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். தாங்கள் சொல்வது போல இன்னும் முற்றிலும் இவை மாறவேண்டும். விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி அய்யா..இன்னும் தேங்கியிருக்கும் பெண்களின் சந்தேகங்களை தீர்க்கத்தான் வேண்டும்.
Deletehttp://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_28.html ['சகுனம்' சிறுகதை பாகம் 2 of 2]
ReplyDeleteஇதே கருத்துக்களில் சிலவற்றை என்னுடைய மேற்படி சிறுகதைப் பதிவின் முடிவில் பின்குறிப்பாகக் கொடுத்துள்ளேன்.
ஆம் அய்யா. படித்துப்பார்த்தேன். மகிழ்ச்சி ...எழுத்துகள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்.
Deleteஅதுவரை வலிமையும் தன்நம்பிக்கையும் அவர்களுக்கு கொடுப்போம்.
ReplyDeleteஎங்கே மா
அருமையான சிந்தனையும் கருத்துகளும்,அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன் அவர்கள் பதிவின் மூலம் உங்கள் பதிவைக்குறித்து அறிந்தேன், நன்றுமா!
ReplyDeleteஅருமையான சிந்தனையும் கருத்துகளும்,அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன் அவர்கள் பதிவின் மூலம் உங்கள் பதிவைக்குறித்து அறிந்தேன், நன்றுமா!
ReplyDeleteபுதிய வார்த்தை ஒன்றை அறிமுகம் செய்திருகிறீர்கள் நன்றி
ReplyDeleteஅக்கா.. அருமையான கட்டுரை..
ReplyDeleteதொடரட்டும் தங்கள் பணி..