குழந்தைகள் வேண்டுமா தனிமனித முடிவுகள், உரிமைகள் பற்றிய அலசல்கள் இப்போது நிறையவே வருகின்றன. அதில் ஒன்றாய் இன்று காலை நாளிதழில் படித்த ஒன்றை இங்கு பகிர்கிறேன். திருமணம் புரிந்து, குழந்தைகள் வேண்டாம் என்றிருத்தல் குறித்த கட்டுரை ஒன்றை படித்தேன் இன்றைய ஹிந்து தினசரியில். கௌரி டாங்கே, (குடும்ப ஆலோசகர், Always a parent ஆசிரியர்) அவர்கள் எழுதியது. http://www.thehindu.com/features/magazine/gouri-dange-on-being-childless-by-choice/article7565746.ece குழந்தைகள் இல்லாது இருத்தல் என்பதை ஒரு சாதாரண விஷயமாய் சொல்வது சுலபம். ஆனால், வாரிசுகளை தோள் தூக்கிச் சுமக்கும் நம் இந்திய சமூகத்தில், பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் இல்லாது இருப்பது எனபது கடினமே. இந்த முடிவில் இருந்தவர்களை குடும்பத்தில் உள்ள மூத்த பெண்கள் தனிப்பட்ட முறையில் அவர்களின் முடிவை ஆதரித்திருப்பதை இவர் எழுத்தில் பார்க்கும் போது, வரவேற்க வேண்டிய ஒரு விஷயமாகவே தோன்றுகிறது. நிறைய நடைமுறை குற்றச்சாட்டுக்களையும் கௌரி அலசியிருக்கிறார். அதை தாண்டி வரவும் வேண்டியிருக்...