பெண்ணாய் காலை சாப்பாட்டுடன், டிவி முன்னாடி உட்கார்ந்தால், சன் மியுசிக்லே சுட சுட சென்னைன்னு ப்ரோக்ராம் ஒன்னு ஓடிகிட்டு இருந்தது. அதில் காம்பியர் பண்ற பையன் (Rio), கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த சந்தோஷம் கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி காணாம போகுதுன்னு ஒரு கேள்வியை எல்லார்கிட்டேயும் கேட்டார். அதில் ஆண்கள் 'வேலை, பொறுப்பு' என்றெல்லாம் பேசியது ஓகேதான். பெண்களிடம் கேட்டால், அவர்கள் சரியா என்ன பதில் சொல்லணும், ஆண்களைப் போலவே, 'நான் அப்போ சந்தோஷமா இருந்தேன், இப்போ அப்படி செய்ய முடியல, இ ப்படி செய்யமுடியல'ன்னு சொல்லியிருக்கணும், சரிதானே.. அதைவிட்டுட்டு, ஆண்கள் சொன்னதை போலவே, அவங்களுக்கு சம்பாதிக்கணும், மனைவியை பிள்ளை குட்டியை காப்பத்தனும்ன்னு டயலாக் பேசுறாங்க. பேசியது எல்லாம் பெரிய பொம்பளைங்க இல்ல.எல்லாம் சின்ன பிள்ளைங்கதான். இந்த காலத்து பெண் பிள்ளைகளே, தான் பெண் என்பதையும் பெண்ணாய் தனக்கு என்ன நேரிடுகிறது என்பதையும் மறந்துவிட்டு, ஆணின் பார்வையில் அந்த கேள்வியை அணுகியது, பெண்களாகிய நாம் இன்னும் எந்த மாதிரி மனநிலையில் இருக்கிறோம் என்பதை தெள...