Skip to main content

Posts

Showing posts from June 28, 2015

நட்பின் வரைமுறைகள்

நட்பின் இலக்கணங்கள் சற்று மாறிப் போய்விட்டது இளைஞர்களிடையே.. தொலைதூர கல்வியின் செயல்முறை தேர்வு அறையொன்றில், இளைய தலைமுறை கூட்டமொன்று, பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளுமாய் வந்திருந்தார்கள். தொட்டு பேசுதல் இப்போதெல்லாம் மிக சாதாரணமாகிப் போனது. அதையும் மீறி ஒரு பையன், அவன்தான் ரொம்ப ஸ்மார்ட்டாக எல்லோரிடமும் சிரித்து அளவளாவிக் கொண்டிருந்தான், ஒரு பெண்ணின் கன்னத்தில் கன்னம் இழைத்து மேல்நாட்டவர் ஸ்டைலில் முத்தம் (எக்ஸாம்க்கு வாழ்த்து சொல்றாங்களாம்) செய்தபோது கூட தவறாக தெரியவில்லை (இதெல்லாம் தவறுன்னு நாம சொல்லவே கூடாதுங்க). இன்னும் இரண்டு பெண்களுக்கும் இதே போலவே வாழ்த்துச் சொன்னான். அவனின் கை அப்போது அந்த பெண்களின் இடுப்பின் மீது அலைபாய்ந்ததைக் கண்ட போது, அவனின் மனதின் தன்மையும் அந்த பெண்கள் அதை சாதாரணப்படுத்துவதில் இருந்து, அதன் தேவையும் புரிந்துப் போனது. சுதந்திரம் என்பது ஆண்களைக் கட்டிப்பிடிப்பதிலும், முத்தமிடுவதிலும், கொஞ்சுவதிலும் இல்லை என்பது இன்று பெண்களுக்கு, எல்லா வயதில் இருப்பவர்களுக்கும்தான், ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. ஆண் பெண் உறவை சகஜப்படுத்துத...

மழையுடன்..

இரவென்றும் நினையாது முற்றத்து குழியில் சத்தமிட்டு முத்தமிட்டது மழை உத்திரம் சுட்ட குளிரில் சுருண்டிருந்த சிறகுகள் , முனகலுடன் , உரசி உறங்கிப்போயின நனைந்துப்போன முகைகள் விடியலில் மொட்டவிழ முடிவுசெய்து இதழ்களை இறுக மூடிக்கொண்டன தொலைந்துப்போன காதலுக்காக மது சுமந்த கவிதைக்காரனும் மரித்துப்போன காதலிக்காக கண்ணீர் சுமந்த கவுளியொன்றும் கலைந்திருந்தனர் மழையுடன்