வானம் நிறைத்த சிவப்பில் வியாபித்து வழிந்தோடியது சாளரங்கள் தைக்கப்பட்ட தேகத்தின் வீதிகளின் வழியே நகோம் நதி.. வரும்போகும் நாட்களின் கணக்கற்று, நிற்காமல் ஓடி ஈரம் வரைந்து காட்டியது பேபிலோனின் தோட்டமாய்.. கருவின் கனவுகள் பொய்த்துப் போனதன் ஆக்ரோஷமாய், பெண்ணாய் சூலானதன் அடையாளம் சுமந்து, பிடிபடாத வாதையில் புரியாத கதை சொல்லிப் போனது.. சட்டென்று மையலைப் பூசிய மழைப்படிந்த மேகமொன்று ஆதாம் நானென்று கடந்துச் சென்றது.. புன்னகைக்கத் தொடங்கியது வெட்கத்தின் சிவப்பு , மீண்டும், ஒரு சுழற்சிக்காக..