மழையிடம்.. மழையிடம் மௌனங்கள் இல்லை தொடும் மேகங்களுடனும் வெள்ளை பூக்களுடனும் பேசியபடியே கடக்கின்றது மலர்களைப் போல் மிதவைகள் கூட மழைக்கானவைதான் மழையின் கரம் பற்றி கதை சொல்கின்றன தத்தளித்து தவிக்கின்றன புதுக்கவிதைக்காரனைப் போல் மிச்சங்களுடன் வாழும் இந்த மிதவைகளிடமும் மழையைப் போல் மௌனங்கள் இல்லை