Skip to main content

Posts

Showing posts from March 1, 2015

போராட்டங்களின் பாதையில் மகளீர் தினம் 2015

நமது தலைநகரில் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த, அதன் பின்னும் நடந்துக் கொண்டிருக்கிற, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் சுவடுகள் மறையவில்லை. அதற்குள் நாளை பிறக்கிறது மகளிர் தினம். நேற்றைய சம்பவங்களைப் பின்னுக்கு தள்ளிவிட்டு வெறும் தினங்களை மட்டும் கொண்டாடுவதில் என்ன மகிழ்வு இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு இந்திய தலைநகரில் ஓடும் பேருந்தில் நடந்த மருத்துவ கல்லூரி மாணவியின் மீது ஆறு பேரால் நடத்தப்பட்ட வன்முறையின் கூறுகள் இன்று BBC நிறுவனத்தால் ஆவணப் படமாக்கப்பட்டு திங்கள் அன்று நியூயார்க் நகரில் நடக்கும் உலக மகளிர் தினத்தில் திரையிடப்பட உள்ளது. அந்த நிகழ்வு நடந்த மறுநாளில் இருந்து தலைநகரில் பெண்கள் நடத்திய போராட்டங்களும் அதன் பின் அந்த வன்முறைக்கு காரணமானவர்களை தண்டித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த நிகழ்வை சுற்றி இருந்தவை நம் கண்ணில் படாமலேயே போயிருக்கின்றன. முதலில் அந்த பெண்ணின் பெயர், அவளின் குடும்ப பின்னணி, அந்த வலியை அவளுக்கு கொடுத்தவர்களின் பின்புலன்கள் எதுவுமே நம் சமுகத்தின் முன் வைக்கப்படவில்லை. இவை எதுவுமே தெரியாத சராசரி...