Skip to main content

Posts

Showing posts from January 11, 2015

காவலற்று..

இதயசுவரை சுருக்கவும் விரிக்கவும் வழியொழித்து கற்கள் அடுக்கி அழகு பார்த்தாய் கல்லறை அமைத்து, கடுந்தொலைவு சென்றுவிட்டு காற்று சுமந்து வருகிறாய் இவ்வமயம்.. கண்ணீரின் சாரலுக்காய் மேகம் தொட்டு திரும்பும் என் விதி வலியது.. அது காற்றுக்கு மசிவதில்லை.. சிலந்தியின் கூடாய் உருமாறி பரிகசிக்கிறது பகலவனையே.. இருந்தும், கண்களை காவலற்று வைத்திருக்கிறது கண்ணீரின் சுவைக்காக..