Skip to main content

Posts

Showing posts from January 4, 2015

உதிர்ந்த இலைகளும் இறந்துப்போன பட்டாம்பூச்சியும்..

நிலவின் நித்திரையில் கண்களற்று, கற்களின் மேல் மோதி, நுரைத்து சத்தமிட்டு எழுப்பியது அந்த நகரத்தை எப்ரோ நதி பேரோமா விளக்கினடியில் சிவப்புக் கொண்டேழுதிய ஆடையை சொருகப்பட்ட சில்லறைகளுடன் சரிசெய்து விலகினாள் அந்த பெண் விரலிடுக்கில் இழுத்து நிறுத்தினான் தன் ஆடையை எழுந்து நிற்க எத்தனித்து தோற்று, நதியினோரமாய் விழுந்தான் கனவில், ஓடிப்போன மனைவியின் பிடரி பிடித்து அடித்தான் எக்காளமிட்ட அடுத்த வீட்டுக்காரனின் அழகிய பெண்ணை முத்தமிட்டான் இறந்து போன விந்துக்களுடனும் இரைச்சலிடும் இரைப்பையுடனும் சிவப்பு ஒயினுடனும் பின் உறங்கிப் போனான் அவன் காலடியில் உதிர்ந்த இலைகளையும் இறந்துப்போன பட்டாம்பூச்சியையும் கொட்டிச் செல்கிறது ஆதி அந்தமறியா அந்த நதி..