விதவிதமாய்..
சத்தியமும் நேர்மையும் நம் பாட்டன் பூட்டனிடமிருந்து, நம் தாய் தந்தையர் வழி நம்முள் பதிந்து இருக்கிறதுதான். இருந்தும், அழகியலுக்காக சொல்லப்படும் (White Lies) சிறு பொய்கள் நமக்கு ரொம்ப பிடிச்சு போகுதுங்க.
'நேத்து வந்து கதவு தட்டினேன், நீங்க வெளியே வரல..' என்ற பூக்காரியின் பொய் பிடிக்கும், நேற்று மாலை முழுவதும் வாசலில் தோழிகளிடம் பேசிக்கொண்டே நின்றது நினைவில் வந்தும்கூட. இந்த சிறு பொய், அவளுக்கு நம்ம மேல எவ்வளவு அன்பு இருக்குன்னு காட்டுதுங்க. உங்களுக்காகவே வந்து கதவு தட்டினேன், அப்படிங்கிற அவளின் வாய்ஜாலமும் அழகுதான் போங்க.
கல்யாண வீட்டுக்கு ஏதோ ஒரு சேலையை சுத்திகிட்டு போனா, அங்கே ஒரு அம்மணி 'உங்க saree சூப்பருங்க..' என்று பொய் சொல்லுவாங்க. நமக்கே தெரியும் அந்த சேலை அவ்வளவா நல்லாயில்லைன்னு. அந்த பொய் கூட பிடிச்சுப்போய் அப்படியே சிரிச்சுகிட்டு நிக்கக்கூடாதுங்க. எதுக்கு சொல்றாங்கன்னு யோசிக்கணும். திருப்பி பதிலுக்கு, உங்க சேலை இன்னும் சூப்பர்ங்கன்னு சொல்லணும். அப்போ அம்மணி முகத்தில தெரியும் பாருங்க ஒரு ஜொலிப்பு, அது எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காதுங்க. அப்புறம் அந்த சேலை நெய்த கதையில் தொடங்கி, இப்போ கட்டிக்கிட்டு வந்த கதை வரைக்கும் சொல்லத் தொடங்கிருவாங்க. அதுக்கு முன்னாடி இடத்தைக் காலி பண்ணிரனும். ஒரு நோக்கத்தோடு சொல்லப்படும் இந்த மாதிரி பொய்கள் Grey Lies.
சொத்து பிரச்னையை சரிசெய்ய திருநெல்வேலி வரை சென்று வீரபாண்டிய கட்டபொம்மனாய் வென்று வந்த நட்பு ஓன்று,'உங்களுக்காக அல்வா வாங்கிட்டு வரணும்னு நினைச்சேன், ஆனா, நீங்கதான் எது கொடுத்தாலும் வாங்கமாட்டீங்களே..' என்று கூசாமல் சொல்லும் பொய் கூட அழகுதாங்க. (அல்வா வாங்கிட்டு வந்து, காசு கொடுங்கன்னு கேட்டா நாம கொடுக்காமலா போகப்போறோம். அவ்வளவு நம்பிக்கை நம்ம மேல )
'ஏங்க, போன தடவை எடுத்த டெஸ்ட்டில் இருந்த கொலஸ்ட்ரால் அளவைவிட இந்த தடவை அதிகமா இருக்கே, டையட், வாக்கிங் எல்லாம் பாலோ பண்றீங்களா,இல்லையா..' என்ற டாக்டரின் கேள்விக்கு, 'oily items யை தொடுறதே இல்ல, தினமும் வாக்கிங் போறேன்னு நாமளே அவர்கிட்டே ஒரு பொய் சொல்லுவோம் பாருங்க. இது நம்ம நாமளே ஏமாத்திக்கிற பொய்ங்க. நம்மை நாமோ அல்லது அடுத்தவர்களையோ ஏமாற்றுகிற பொய்தான் கருப்பு பொய்கள் (Black Lies). இதை மட்டும் விட்டுட்டு மத்த பொய்யெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொல்லிக்கலாம்.
'உன் கையெழுத்து பார்க்க நல்லாயிருக்கு'(கோழி கிண்டலா அது இருந்தாலும்)
'இன்னைக்கு சைடு டிஷ் சூப்பரா வச்சிருந்தே'(வாயில் வைக்கமுடியாம மகாகேவலமாக இருந்தாலும்)
'சீக்கிரமா ஹோம்வொர்க் முடிச்சிட்டியே'(பையன் கூட உட்கார்ந்து ஹெல்ப் பண்ணி, டிவி சீரியல் எல்லாம் பார்க்க முடியாம மிஸ் பண்ணினாலும்)
'உங்களுக்காக சினிமாவுக்கு கூட போகாம வெயிட் பண்றேன்' (லேட்டா வந்ததுக்காக மனசுக்குள்ளே திட்டிகிட்டு இருந்தாலும்)
இப்படி சின்ன சின்ன பொய்கள் நம்மை, நம்மை சுற்றியிருப்பவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கும்ன்னா, அதை சொல்வதில் தப்பில்லைங்க.
மனதை காய படுத்தாத பொய்கள் இனிக்கும் ....
ReplyDeleteஉண்மையே
Deleteநிஜம் தான். சில நேரம் பொய்கள் அவசியமாகின்றன.
ReplyDeleteஅருமையான பதிவு.
மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
மிக்க நன்றி அய்யா..
Deleteபொய்யில் உண்மையா
ReplyDeleteஇத்தனை வகை இருக்கா
உண்மையாகச் சொன்னால்
பொய் குறித்துச் சொல்லிப் போனவிதம்
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா
Deleteஅருமையான பதிவு
ReplyDeletehttp://www.ypvnpubs.com/
மிக்க நன்றி
Deleteசின்ன சின்ன பொய்களை பற்றிய அருமையான அபாரமான அட்டகாசமான பதிவு. இதையும் பொய் என்று நினைத்து அடுத்த பதிவில் போட்டுவிடாதீர்கள்.
ReplyDeleteசென்ற வருடம் சக பதிவர் பரதேசி (paradesiatnewyork) அவர்களின் தலைமையில் நியூயார்க் நகரில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் "நல்ல செய்திட பொய் சொல்லலாம், சரியே ! தவறே" என்ற பட்டிமன்றத்தில் சரியே என்று அடியேன் பேசி எங்கள் அணி வெற்றி பெற்றது நினைவிற்கு வருகின்றது.
ஹாஹா...போடமாட்டேன்..
Deleteநல்லவைகளுக்காக பொய் சொல்லலாம்..உண்மைதான்..
பொய்மையும் வாய்மை இடத்த
ReplyDeleteவள்ளுவரின் வாக்கு
Deleteஎன்னவோ கிறுக்கி இருக்கீங்க.....உங்க பதிவு நல்லாவே இல்லைங்க.....(ஹீஹீ இப்படி சொல்லித்தான் உங்களை பாராட்ட வேண்ட இருக்கிறது
ReplyDeleteஹாஹா...செய்யுங்க..
Deleteஅழகாகச் சொன்னீா்கள்.
ReplyDeleteமிக்க நன்றி..
Deleteவணக்கம்
ReplyDeleteஅற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றியும் மகிழ்ச்சியும்
Deleteசின்ன சின்ன பொய்கள் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்கத்தான் செய்கின்றன! சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி
Delete