இரவென்றும் நினையாது
முற்றத்து குழியில்
சத்தமிட்டு முத்தமிட்டது மழை
முற்றத்து குழியில்
சத்தமிட்டு முத்தமிட்டது மழை
உத்திரம் சுட்ட குளிரில்
சுருண்டிருந்த சிறகுகள், முனகலுடன்,
உரசி உறங்கிப்போயின
சுருண்டிருந்த சிறகுகள், முனகலுடன்,
உரசி உறங்கிப்போயின
நனைந்துப்போன முகைகள்
விடியலில் மொட்டவிழ முடிவுசெய்து
இதழ்களை இறுக மூடிக்கொண்டன
விடியலில் மொட்டவிழ முடிவுசெய்து
இதழ்களை இறுக மூடிக்கொண்டன
மது சுமந்த கவிதைக்காரனும்
மரித்துப்போன காதலிக்காக
கண்ணீர் சுமந்த கவுளியொன்றும்
கலைந்திருந்தனர்
மழையுடன்
சுமை நீங்குமா....?
ReplyDeleteம்ம்...
Deleteவரிகள் அருமை!
ReplyDeleteஉணர்ந்தேன்
ReplyDeleteமனமெங்கும் ஈரப்பதம்
பகிர்வுக்குக் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி அய்யா
Deleteதொலைந்து போல காதலுக்காக கவி சுமந்த கவிதைகாரனும்,மரித்து போன காதலுக்காக எழுந்த கெவுளி சந்தங்களும் இந்த கவிதை மழையில் கலைந்து இருந்தார்களா இல்லை கலந்து இருந்தார்களா...
ReplyDeleteஹாஹா...நன்றி ராஜன்
Deleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (03/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
மகிழ்ச்சி ...
Deleteசிரமம் மேற்கொண்டு அய்யா இங்கு பதிவுகளைப் படித்து பார்த்து எழுதியிருப்பதை அறிந்து வியந்தேன். நன்றி தங்களுக்கும்
தங்களின் பதிவுகளையும் தொடர்கிறேன்
அருமையான கவிதை சகோதரி.
ReplyDeleteமிக்க நன்றி குமார்
Delete