Skip to main content

போராட்டங்களின் பாதையில் மகளீர் தினம் 2015



நமது தலைநகரில் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த, அதன் பின்னும் நடந்துக் கொண்டிருக்கிற, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் சுவடுகள் மறையவில்லை. அதற்குள் நாளை பிறக்கிறது மகளிர் தினம்.

நேற்றைய சம்பவங்களைப் பின்னுக்கு தள்ளிவிட்டு வெறும் தினங்களை மட்டும் கொண்டாடுவதில் என்ன மகிழ்வு இருக்கிறது.

2012 ஆம் ஆண்டு இந்திய தலைநகரில் ஓடும் பேருந்தில் நடந்த மருத்துவ கல்லூரி மாணவியின் மீது ஆறு பேரால் நடத்தப்பட்ட வன்முறையின் கூறுகள் இன்று BBC நிறுவனத்தால் ஆவணப் படமாக்கப்பட்டு திங்கள் அன்று நியூயார்க் நகரில் நடக்கும் உலக மகளிர் தினத்தில் திரையிடப்பட உள்ளது.

அந்த நிகழ்வு நடந்த மறுநாளில் இருந்து தலைநகரில் பெண்கள் நடத்திய போராட்டங்களும் அதன் பின் அந்த வன்முறைக்கு காரணமானவர்களை தண்டித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் அனைவரும் அறிந்ததே.

ஆனால், அந்த நிகழ்வை சுற்றி இருந்தவை நம் கண்ணில் படாமலேயே போயிருக்கின்றன. முதலில் அந்த பெண்ணின் பெயர், அவளின் குடும்ப பின்னணி, அந்த வலியை அவளுக்கு கொடுத்தவர்களின் பின்புலன்கள் எதுவுமே நம் சமுகத்தின் முன் வைக்கப்படவில்லை.

இவை எதுவுமே தெரியாத சராசரி மத்தியதர குடும்ப பெண்மணி, படிக்க, வேலை பார்க்க என்று வெளியே செல்லும் தன் பெண்ணுக்கு என்ன பாதுகாப்பை தர முடியும்? அவளுக்கு எதை எதையெல்லாம் போதித்து வெளியே அனுப்ப இயலும்?

இந்த கேள்விகள் உடைப்படாத வரை மீண்டும் இதே நிகழ்வுகள் நடந்துக் கொண்டேயிருக்கும் சாத்தியகூறுகள் இருக்கின்றன.

அந்த பெண்ணின் பெயர் ஜோதி என்பதும், அவளின் குடும்பம் சாதாரண மத்தியதர குடும்பம் என்பதும் நாம் அறிந்துக் கொள்கிறோம். ஒரே மகளாய் பிறந்து, மருத்துவ கனவுகளுடன் இருந்த அவளுக்காக அவளை பெற்றவர் தனக்கென்று இருந்த ஒரே பூர்வீக நிலத்தை விற்று அவளை படிக்க வைக்கிறார். அந்த பெண் பகுதிநேர வேலைப் பார்த்து தன் படிப்பை முடிக்கிறாள். இன்னும் ஆறு மாத காலமே இருக்கிற நிலையில் தன் தோழமையுடன் சினிமாவிற்கு சென்று திரும்பும் போது இந்த சம்பவம் நடந்துவிடுகிறது.

செய்தவர்கள் அனைவரும் இளைஞர்கள், குடிபோதையில் இருந்தார்கள் என்பதும் நாம் பத்திரிக்கைகளின் வாயிலாக அறிந்த உண்மைகள். அவர்கள் அனைவரும் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களின் வாழ்வு முறைகளில் பெண்களை அடிப்பதும் காயப்படுத்திப் பார்ப்பதும் மிக சகஜமான ஒன்று என்பதும் அதற்காக அவர்கள் வருத்துவதில்லை என்பதும் பெண் பிள்ளைகளுக்கு சாப்பாடு போடாமல் ஆண் பிள்ளைகளை மட்டும் சாப்பிட வைக்கும் வழக்கம் கொண்டவர்கள் என்பதும் இப்போது வெளிச்சமாகிறது.

சம்பவம் நடந்த அன்று, அந்த இளைஞர்கள் அவர்கள் பகலில் ஓட்டும் ஒரு தனியார் வண்டியை எடுத்துக் கொண்டு, குடி போதையில் சந்தோஷமாக இருக்க எண்ணி, யாராவது சிக்கமாட்டார்களா என்னும் நோக்கிலேயே சுற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பது நம்மை உறைய வைக்கிறது.

சம்பந்தமே இல்லாத இரு தட்டு மக்களின் மனநிலைகளில் இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
    
எங்கு தவறுகிறோம் நாம்?
.
மத்தியதர குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கிறோம். கேட்கும் அனைத்தையும் சக்திக்கு மீறியும் வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால், ஒழுக்கதிற்கான கல்வியைக் கொடுக்க தவறிவிடுகிறோம். நமது கல்வித்திட்டத்தில் அப்படி ஒரு கல்வியின் சுவடே இல்லை. உடல் கல்வியை போதிக்காமல் மேலைநாட்டு கலாச்சாரங்களை மட்டும் கடன் வாங்கிக் கொள்கிறோம்.

அவர்களின் ஆடைகள், சாப்பாட்டு முறைகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் அப்படியே காப்பி செய்யும் நாம் அதற்கு நம் சமுகத்தை சரியான கல்வி கொடுத்து தயார் செய்தோமா என்றால், இல்லை.

அவர்கள் சமுகத்தை போல் நமது சமூகம் இல்லை. நமது இந்தியாவில் அடித்தட்டு மக்கள் அநேகம். அவர்களின் பார்வையும் மத்தியதர மக்களின் பார்வையும் ஒன்றாய் இருப்பதில்லை. மேல்தட்டு மக்களின் பார்வை மிகவும் வித்தியாசமானது. அவர்கள் இந்தியாவில் பிறந்ததாகவே நினைப்பதில்லை.


இப்படிபட்ட நிலையில், பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளில் என்ன மாற்றங்களை நாம் கொண்டு வரமுடியும்.

1.        சமுகத்தில் எல்லா நிலையில் இருப்பவர்களுக்கும் கல்வி கொடுக்க வேண்டும். அதில் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மற்ற பாடங்களை விட, ஒழுக்க கல்வியை முக்கிய பாடமாக வைக்க வேண்டும்.   

2.        மொழி பேதங்களை விடுத்து, அவரவர் மொழியிலேயே அந்த ஒழுக்கம் மற்றும் உடல் கல்வியை கற்க செய்ய வேண்டும்.

இதெல்லாம் நடந்தேறும் வரை, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம். ஒழுக்கக் கோட்பாடுகள் சமுகத்தின் எல்லா தட்டு மக்களிடமும் சமமாய் பார்க்கப்படும் வரை நம் குழந்தைகளைக் கவனமாகத் தான் நடந்துக் கொள்ள சொல்லவேண்டும். அவர்களின் ஆடைகளிலும், பழக்க வழக்கங்களிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.  

அதுவரை வரும், மகளிர் தினங்களை நமது பெண்களுக்கான போராட்ட தினங்களாகவே நாம் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது.






Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தனிமனித ஒழுக்கத்திற்கான கல்வி அனைவருக்குமே வேண்டும்... அப்போதான் உருப்படும்...

    ReplyDelete
  3. உங்கள் கருத்துக்கள் யாவையும் உண்மையே வரவேற்க படவேண்டியவையே ..ஆனால் ஒரு உண்மையை நீங்கள் மறக்கவேண்டாம் ...பேட்டியின் முழு விவரம் நம்முடைய தின நாழிதள்களில் வெளியானது நாம் அனைவரும் அறிவோம் ..முதலில் பின் இரவுகளில் அவர்கள் அரை குறை ஆடையுடன் செல்வது அவர்கள் உரிமை அதேசமயம் பாதுகாப்பானதா இல்லை தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறமை இருக்கிறதா எனவும் புரிந்து பின் இரவுகளில் செல்லவேண்டும் இங்கே நார்த்ல் இருந்து வரும் பெண்கள் நடு இரவில் நிக்கர்போட்டு கொண்டு செல்வதும் கார்போரேட் கம்பனிகளில் வேலை செய்யும் நார்த்பெண்கள் ஒரே வீட்டில் சம்பந்தம் இல்லாமல் 3 இல்லை 4 ஆண்களுடன் தங்கி இருப்பதும் அவர்கள் கலாச்சார சீர்கேடு நம் தமிழ் இனக்களில் காம மிருகங்கள் குறைவு அதே நார்த் கலாச்சாரத்தில் இங்கே இருப்பவர்கள் இருந்தால் ..தினமும் இதுபோல் நடக்கலாம் ...
    சில தினங்களுக்கு முன் நார்த் பெண்கள் சிலர் நடு இரவில் சில நார்த் பையன்களுடன் ஏதோ ஒரு பானம் குடித்து கூத்து அடித்து கொண்டு இருந்தனர் ..இதை எல்லாம் நமது காவல்துறை பார்த்தாலும் என்ன செய்யும் காசு வாங்கி கொண்டு கண்டுக்காமல் தான் செல்லும் ...இவ்வுளவு இருந்தாலம்..ஹோலி பண்டிகை நார்த் சைடு உள்ளவர்கள் கொண்டாடுவது அதைபார்த்து இங்கே உள்ளவர்களும் கலர் பொடி தூவி கொண்டு திரிவது எல்லாம் மயிலை பார்த்து காக்கை கோடு போட்ட கொண்ட கதைதான்..இதெல்லாம் எதற்கு செல்கிறேன் என்றால் நம்முடைய வருங்கால பெண் சந்ததியினர் போலியான அந்த கலாச்சாரங்களில் சிக்கி இவர்களும் பிரச்சனைகளை தானே தேடி கொள்கின்றனர் ..வன்முறைகள் ஏன் நிகழ்கின்றன அதன் மூல பொருளை ஆராயுங்கள் ...உதாரணமாக எங்கள் குடியிருப்பில் இருக்கும் நார்த் பெண்மணி சிறிய ரம்பா நிக்கர் இட்டு அந்த அரை நிர்வான கால்களை தூக்கி கம்பிகளின் மேல் தூக்கி போட்டு புகை பிடிப்பார் ..அதை இங்கே உள்ள சில சீர்திருத்த வாதிகள் அவரை குறை சொல்லும் போது நான் என்னுடைய கருத்துக்களை கூறினேன் அவள் புகை பிடிப்பதும் கால்மேல் கால்போட்டு நிக்கர் போட்டு கொண்டு இருப்பதும் அவர்கள் கலாசாரம் ..ஆனால் அவர் அவள் வீட்டில் செய்கிறாள் நீ ஏன் அங்கே உற்று பார்க்கிறாய் ..அது உன் வக்கிரம் உன் உந்தப்பு ..அதே சமயம் அவள் அத்தே கோலத்துடன் வெளியேயும் நடமாடினால் அது கண்டிக்கத்தக்கதே ..அதேதான் இங்கேயும் சொல்ல்கிறேன் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரமாக இருக்கலாம் ஆனால் ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும் தவறுகள் தானாலே குறையலாம்….. ..இது ஒரு கருத்துதானே தவிர பெண்ணியத்திற்கு எதிரானவன் இல்லை பெண்களை பல்வேறு வடிவங்களில் வணங்கும் நாட்டை சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    ReplyDelete
  4. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை

    வலைச்சர தள இணைப்பு : வலைப்பூக்கள் பலவிதம்

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்...

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும...

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த...