.
சுயம்புகள்,
சூத்திரதாரிகள்..
காய் வெட்டி கட்டம் முன்னேறக் கூடியவை
அன்பும் அமைதியும் ஓரிரு கட்டங்களுடனும்
இரக்கமும் குற்றுணர்வும் இன்னும் சிலவற்றுடனும்
முடியிறக்கப்பட்டு வெளியேறுகின்றன
அடங்காமல், ஆசையின் நம்பிக்கை சுமந்து
அரிதாரம் பூசாத சாமியாடியாய்
ஆடித் தீர்க்கின்றன நித்தமும்
வேம்புவின் வேதாளமாய் கை பரப்பி
அவனுக்குள்ளும் இவளுக்குள்ளும் எவருக்குள்ளும்
திமில் சுமந்து திரிகின்றன
எங்கோ குரைக்கும் நாய்களுக்காய்
இதயம் துறந்து ஓடி,
மீண்டும் தஞ்சம் புகுகின்றன உடலுக்குள்..
சுயம்புகள்,
என்றும் சூத்திரதாரிகள்தான்..
சரி தான்....
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete