நினைவுகளுடனும் கனவுகளுடனும்
நீ உறங்கும் இடம் தெருவாகிப் போனது..
ஈக்கள் மொய்க்கும் உன் ரணங்களெல்லாம்
கட்டபொம்மனாய் நீ மாறியதாலோ
கள்ளம் மறந்த பால்யதாலோ அல்ல..
கட்டபொம்மனாய் நீ மாறியதாலோ
கள்ளம் மறந்த பால்யதாலோ அல்ல..
உன் கோதாத தலைமுடியும்
கையில் விழுந்திருக்கும் ஒற்றை நாணயமும்
உன் மேனி தழுவிய செல்வந்தர் வீட்டு சொக்காயும்
காலணி கண்டிராத அழுக்கு பாதங்களும்
உன்னை தெருவின் குழந்தையாய்
தார்மீக தத்து கொள்கின்றன
கையில் விழுந்திருக்கும் ஒற்றை நாணயமும்
உன் மேனி தழுவிய செல்வந்தர் வீட்டு சொக்காயும்
காலணி கண்டிராத அழுக்கு பாதங்களும்
உன்னை தெருவின் குழந்தையாய்
தார்மீக தத்து கொள்கின்றன
கல்வி பிச்சையிடாமல், காசு பிச்சையிட்டு
புண்ணியம் சம்பாதிக்க விரும்பும் சமுகத்தின்
சாத்வீக வாயிற்படி நீதான்
உனக்கு உறக்கம் ஏன்? எழுவாய்
உன் தாயை அழைக்கும் அழுகுரலில்தான்
நீ பசியாறும் பாக்கியம் பெறுவாய்
புண்ணியம் சம்பாதிக்க விரும்பும் சமுகத்தின்
சாத்வீக வாயிற்படி நீதான்
உனக்கு உறக்கம் ஏன்? எழுவாய்
உன் தாயை அழைக்கும் அழுகுரலில்தான்
நீ பசியாறும் பாக்கியம் பெறுவாய்
தெருவில்,
பிச்சையிடும் பாக்கியவான்கள்
நடக்கத் தொடங்கிவிட்டார்கள்..
பிச்சையிடும் பாக்கியவான்கள்
நடக்கத் தொடங்கிவிட்டார்கள்..
- Get link
- Other Apps
- Get link
- Other Apps
வணக்கம்
ReplyDeleteமனதை கனக்கவைக்கும் வரிகள் மின அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி உங்களுக்கு
Deleteகலங்கச் செய்யும் வரிகள் சகோதரி...
ReplyDeleteபடமும் வலியைக் கொடுக்கிறது.
இந்த மாதிரி குழந்தைகளைப் பார்க்கையில் மனதில் வலிக்கிறது
Deleteமிகவும் வேதனைப்பட வைக்கும் நிகழ்வு.
ReplyDeleteஅதுவும் இங்கு சென்னையில் இப்படி நடைபாதை ஓரமாய் அனேக குழந்தைகள். என்று விடிவோ என்றே தோன்றுகிறது அய்யா
DeleteNice but (very said)
ReplyDeletetrue
Deleteபடிக்க கவிதை அருமையாக இருக்கிறது ஆனால் படித்து முடித்த பின் மனதை சுட்டு ( தொட்டு ) செல்கிறது
ReplyDeleteஇப்படி பட்ட படங்களை பார்க்கும் போதும் கவிதைகளைபடிக்கும் போது நமது மனம் அப்படியே உச்சு கொட்டிக் கொண்டே எதுவும் செய்ய்ய முடியாமல் நகர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது ...
///கல்வி பிச்சையிடாமல், காசு பிச்சையிட்டு
புண்ணியம் சம்பாதிக்க விரும்பும் சமுகத்தின்///
//பிச்சையிடும் பாக்கியவான்கள்
நடக்கத் தொடங்கிவிட்டார்கள்../////
இந்த வரிகள் அருமை
பாராட்டுக்கள்
இங்கே கவிஞர் படம் பிடித்து காட்டி இருப்பது மனிதர்களில்ன் வாழ்வு நிலை ..அவ்வுளவுதான் ..இதில் நான் நீ என்பதெல்லாம் போலி வேஷம் இருப்பதாய் வைத்து இன்பம் காணுவோம் ...
ReplyDelete