திருப்பூர் அரிமா சக்தி விருது சந்தோஷமான விஷயம்... சிறந்த பெண் படைப்பாளர்களில் ஒருவராக நானும் என் எழுத்துக்காக 'அரிமா சக்தி விருது' பெற்றேன் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் சார்பாக படைப்பாளிகளுக்கான விருது டிசம்பர் 25, 2014 அன்று திருப்பூர் அரிமா சங்க வளாகத்தில் வைத்து விழா எடுக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதில் குறும்படம் / ஆவணப்படத்திற்கான விருதுகளும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவின் தொடக்கம் சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கியது. விருது பெற்றவர்களை பேச அழைத்திருந்தனர். சென்னையில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் பெண்மணிகள் வந்திருந்தனர். அவரவர்களின் எழுத்தின் அனுபவங்களைச் சொல்லிச் சென்றனர். நானும் சற்று பேசிவிட்டு வந்தேன். பெண்கள் வீடு தாண்டி, சமூகம் தாண்டி எழுதிவருவதையும் அதற்கான விருது என்பது அவர்களுக்கு ஒரு மகிழ்வும் ஊக்கமும் உயர்வும் தரும் விஷயம் என்பதை சொன்னேன். அரிமா கோபாலகிருஷ்ணன், அரிமா செல்வராஜ் மற்றும் அரி...