Skip to main content

Posts

Showing posts from December 7, 2014

வேர்கள் விழுதுகளாகுமென..

பெண்ணே , உன் ஆசைகளுக்கு திறவுகோல் இல்லை  நீ நிறைவு கொண்டவள் தாயிழந்த நிமிடம்  தாயானாய் பூக்களின் மேல் விருப்பமற்று நின்றாய்  வளரும் இடத்திலேயே அதை நிறுத்தி வைத்து பார்த்தாய் ஆடை அணிகலன்களின் நாட்டமின்றி ஆண்டாளாய் புத்தனுக்கு ஆனாய் போதியின் அடியிலேயே  புத்தத்தை ஒளித்து வைத்து புன்னகை பூத்தாய்   சுற்றம் உன்னை மேலே தூக்கியது.. பெண்ணே , நீ நிறைவு கொண்டவள் பின் எங்கு தோற்றாய் ஏதோ ஒரு புள்ளியில் தொலைகிறாய்..  வாழ்வின் முன் அந்தியில் நின்று  தேடும் நேரத்தை விரயமாக்குகிறாய் , விழுந்தால் மீண்டுமொருமுறை எழுவது இயலாதென தெரிந்தும்.. சாவின் நிழலில் சார்த்தப்பட்டிருப்பது உனக்கான ஊன்றுகோல்கள் இல்லை இருந்தும் , வேர்கள் விழுதுகளாகுமென காத்திருக்கிறாய் கண்களில் நீருடன்..