Skip to main content

Posts

Showing posts from October 5, 2014

நாங்கதாங்க பெண்கள் 2

நாங்கதாங்க பெண்கள் 2 இது புதியதரிசனம் இதழில் தொடராய்  தற்சமயம்  வெளிவந்துக் கொண்டிருக்கிறது.. புதிய தரிசனம் இதழ் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்  பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் பாவங்க. வீட்டில் கணவர், குழந்தைங்ககிட்டே அப்படி இப்படின்னு கொஞ்சம் சத்தம் கொடுப்பாங்கதான். மற்றபடி பார்த்தால் சீக்கிரம் மனசு இறங்குவாங்க. ‘என்னடா’ ன்னு கணவர் சொன்னாலே சமாதானம் ஆகிடுவாங்க. உள்ளே பெரிதாக மனக்கசப்புகள் இருக்காது.  வேலைக்கென்று போய் வெளியுலகை எட்டிப்பார்க்கும் பெண்கள், கொஞ்சம் போராடும் குணம் சார்ந்து இருப்பாங்க. அது அவர்களின் வெளியுலக வாழ்விற்கு தேவையாய் இருப்பதால். அந்த மாதிரி பெண்கள் கொஞ்சம் பந்தாவாக தைரியமாக இருப்பாங்க. அந்த பந்தாவே அவங்களுக்கு அழகுதான்.  எங்க ஏரியாவில வியாழக்கிழமை அன்னைக்கு மார்கெட் போடுவாங்க. அங்கே சேலையைத் தூக்கி இடுப்பில் செருகிய ஒரு குண்டு பெண்மணியைப் பார்க்கலாம். ரொம்ப கறாராகப் பேசுவாங்க. சுத்தும் முத்தும் அவங்க போடும் சத்தத்திலேயே கடைக்கு போன நாம மிரண்டுவிடுவோம்.  'இவ எங்கடி போனா, நீ வந்து அவ கடைல இருக்கே....

திறனற்ற ஒரு சுயம்பு காட்டி..

வட்டம் குலைந்த நிலவின் முழிப்பில், பேயாய் முருங்கையின் கைகள் காற்றில்... சட்டென்று தாழ்ந்து தரை தொட்டும் வீசி உயர்ந்து நிலவை விரட்டியும் தளிரின் நிழல்களை கூர்வாளாய் நீட்டியும் சருகுகளை சுருட்டி நகங்களாக்கியும் சாய்ந்திருந்த அந்த ஓட்டுவீட்டை முழுங்கியபடி, தன்னையே, வேதாளமாக்கியும் விக்கிரமாதித்தனாக்கியும், திறனற்ற ஒரு சுயம்பு காட்டி, விடியலின் முதல் வெளிச்சத்தில் அடங்கிப் போக ஆர்ப்பரிக்கிறது..