நாங்கதாங்க பெண்கள் 1 இது புதியதரிசனம் இதழில் தொடராய் தற்சமயம் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.. புதிய தரிசனம் இதழ் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும் பெண்களைப் பற்றி எழுதுங்கன்னு என்கிட்டே சொல்லிட்டாங்க. நான் யோசிக்கவே இல்லீங்க. கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன. சந்தோஷமா எழுத ஆரம்பிச்சிட்டேன். ரெகுலரா ஆபீஸ் போகிற பெண்கள், நேரம் காலம் இல்லாம கலைத்துறையில காவல்துறையில வேலை பார்க்கிற பெண்கள், வீட்டுல நேரம் போகாம இருக்கிற பெண்கள், வயசான பாட்டிங்க, அவங்க பேத்திமார்கள் இப்படி எல்லோருக்கும் சேர்த்துதான் எழுதப் போறேன். முதலில் நான் ஒரு பெண் என்பதில் எனக்கு நிறைய பெருமை உண்டு. ஆனால் நிறைய பெண்கள் ஏண்டா பொண்ணா பிறந்தோம்னு வருத்தப்படுவாங்க. வருத்தமே பட தேவையில்லை. யோசிச்சுப் பாருங்க, ஒரு வயசுக்கு மேலே ஆண்களுக்கு கலர் கலரா சட்டை கூட போடமுடியாதுங்க. பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க, இந்த கிழவனுக்கு இந்த வயசுல மைனர் மாதிரி ஆசையைப் பாருன்னு சொல்லி சொல்லியே, லைட்டா வெளிறிப் போன கலர்ல சட்டையை போட வச்சிருவாங்க. ஆனா நாம வயசாகி காட்டன் புடவை கட்டினா கூட அதுலேயும் கலர் கலர...