இன்றைய விடியலின் முகத்தை உன் முகமாக்கினாய் உயிரை பிரித்து உடலை இங்கிருத்தி விட்டு நீ விட்டுச்சென்ற வாழ்க்கையில் உன் பதவியின் கனம் எனதாகிப்போனது என் பின் பிறந்தோர்க்கு நீ இருந்த பொழுதுகளில், சன்னல் தொட்ட காற்றை திரைசீலையுடன் மட்டுமே பேசச் செய்தாய் எண்ணெயிடாத என் தலைமுடியை பூவைத்து பின்னலிட்டு இறுக்கினாய் ஜார்ஜெட் தாவணிக்கு கூட கஞ்சி போட்டு என் இடுப்பில் சொருகினாய் அம்மா, நீ இட்டவை இலட்சுமண கோடுகள்தான் சில அத்துமீறல்களுடன் தாண்ட முயற்சித்து வென்றும் தோற்றும் பயணப்பட்டிருக்கிறேன் பிள்ளைகள் பெரிதானால் பின்னலிடாமல் கொண்டையிடும் உன்னைப் போல் நான் இல்லைதான்... இருந்தும், அன்பில் நான் உன்னை போலவே என்றும் இருக்க வேண்டியிருக்கிறேன்... ..