வலையுலகில் கோவை பெண்கள்... இன்றைய தி ஹிந்து நாளிதழில், மெட்ரோ பிளஸில் வலைப்பதிவு உலகில் என் முயற்சி பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. என் தோழி எழிலும் ( http://nigalkalam.blogspot.in/ ) இதில் உண்டு என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன். படித்துப் பார்க்கவும் : http://www.thehindu.com/sci-tech/technology/internet/blog-by-blog/article5709804.ece சிறுவயதில் இருந்தே பக்கம் பக்கமாக டைரி எழுதுவது வழக்கம். ஒரு நாளின் பதிவுகளை அந்த பக்கம் நிறைத்து அடுத்த தேதியின் பக்கத்தில் ஒரு கட்டம் போட்டு எழுதுவேன். எழுதும் அந்த பழக்கம்தான், இன்று என்னை வலைப்பதிவு (Blog) உலகில் நிமிர்ந்து நிற்க உதவியது. 2004 யில் ஆரம்பித்த இந்த வலைபதிவு எழுத்துகள் என் காகித கணக்கை சற்று குறைத்துவிட்டது என்னமோ நிஜம்தான். எனினும் நான் மட்டுமே படித்துவந்த என் எண்ணங்களை இன்று அனைவரும் படித்து ரசிக்க வைத்து, என்னை மேலும் மேலும் எழுத தூண்டியது இந்த வலைபதிவு உலகம்தான். இதை படிப்பதோடு நிறுத்திவிடாமல் நீங்களும் உங்களின் எண்ணங்களை எழுத்துகளாக்கி அனைவரும் படிக்க உதவலாம். உங்களின் பயண அனுபவங்கள், சமையலின் வாசம், குழந்த...