ஏதோ ஒரு வாசலின் வழி இயலாமையின் இழுப்பிற்கு உடன்பட்டு உட்புகும் உருவமற்ற அதன் நீட்சி... குதிருக்குள் வழிதேடும் சுண்டெலியாய் அங்கும் இங்குமாய் அடங்கா அலையும்... அரைக்கண் பார்வைகளையும் அழுகையாய் சித்திரங்களையும் சிலநேரம் விட்டுச் செல்லும்... சீண்டிய காரணிகளை திசையெங்கும் தேடியோடும்... மிதிபடும் சருகுகளில் பாதம் கிழிபட மனியடித்துத் திரும்பும்... கண் திறந்தே உறங்கிப்போகும் உருவமற்ற அதன் நிழல்...