நூல் வெளியீட்டு விழா பனியின் புல்வெளியை சுமந்து நிற்கும் அழகான உதகையின் மார்கழி மாத ஒரு காலை வேளையில் (டிசம்பர் 29, 2013 ) படைப்பாளிகளாகவும் படிப்பாளிகளாகவும் கூடியிருந்த பெரிய அரங்கில் என்னுடைய இரண்டாவது நூல் ‘சொல்லிவிட்டுச் செல்’ வெளியீடு சிறப்பான முறையில் நடைபெற்றது. வந்திருந்து வாழ்த்திய அனைத்து தோழமைகளுக்கும் என் நன்றி. விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் தகிதா அறக்கட்டளை. இது அவர்களின் நான்காம் ஆண்டு வெளியீடு. சுமார் 60 நூல்கள் இதுவரை வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களின் ‘சுவடுகள் நெய்த பாதை’ நூலும் இந்த விழாவில் வெளியிடப்பட்டு சிறப்புரையும் ஆற்றினார். மற்றும் கவிஞர் பீர் ஒலியின் ‘சிறகுகளின் சுவாசங்கள்’, கவிஞர் கடங்கநேரியானின் ‘நிராகரிப்பின் நதியில்’, கவிஞர் தியாகுவின் ‘நீயும் நானும்’, கவிஞர் சிலம்பரசனின் ‘காதலாகி போனேன்’, கவிஞர் மௌனிகாவின் ‘கவிதை பொழியும் தூரிகை’ நூல்களும் வெளியிடப்பட்டது. தகிதா பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் போ. மணிவண்ணன் அவர்களின் ‘பனி சுமந்த மேகங்கள்’ ...