பறப்பதை பிரயத்தனப்பட்டு செய்கிறது
அந்த காக்கை.
மெதுவே மேலேழும்பி
பருந்தாய் சிறகு நீட்டி பறக்கிறது.
காற்றின் சுழலில் சிக்கி
தடுமாற்றத்தில் மண் புகாமலிருக்க
சிறகடிக்க கற்றுக் கொள்கிறது.
அசைவின் போதே கூட்டின் தொலைவு
அயர்ச்சியை உண்டாக்குகிறது.
காற்று சற்று கண்ணயரும் நேரம்
கடுகாகிறது அது.
நெருங்கிய மரத்தின்
உச்சிக் கொம்பில் அமர்ந்து
உரக்க அழைக்கிறது உறவுகளை
பறப்பது பெரிய விந்தையல்ல
என்பதாய்..
பறப்பது பெரிய வித்தையல்லதான் முயற்சித்தால்...
ReplyDeleteகவிதை அருமை.
வணக்கம்
ReplyDeleteமுயற்சி எப்போதும் ஒரு படி உயர்த்தி வைக்கும்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை.
ReplyDeleteநன்றி.
வாங்களேன் என் பதிவிற்கு உங்களுக்காய் ஒரு விருது அங்கிருக்கிறது
ReplyDeletehttp://www.nigalkalam.blogspot.com/2014_09_01_archive.html
அன்புள்ள திரு.அகிலா அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
பறப்பதை பிரயத்தனப்பட்டு செய்கிறது அந்த காக்கை..
நெருங்கிய மரத்தின்
உச்சிக் கொம்பில் அமர்ந்து
உரக்க அழைக்கிறது உறவுகளை
பறப்பது பெரிய விந்தையல்ல
என்பதாய்..
பறக்கும் காக்காய் நன்றாக இருக்கிறது...
எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
-மாறத அன்வுடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in