என்றோ ஒரு நாள் புகையிழுத்து பயணிக்கும்
கூட்ஸ் வண்டியின்
உதறிச் சென்ற கரித்துண்டுகளை
ஊரே சிலாகிக்கும்
முரடாய் முகப்பு
சிவப்பாய் பெட்டிகள்
சங்கிலியாய் சக்கரங்கள்
ஓலமிட்டு நகரும் அதன் இறுமாப்பில்
ஊரே வாய் பிளந்திருக்கும்
உதிர்ந்த கரித்துண்டுகள்
ஊரெங்கும் காதல் சித்திரங்களாகும்
அவை காற்றில் சிறிதொரு காலத்திற்கு
கிசுகிசுப்பாய் கொடி நாட்டியிருக்கும்
அரவமற்ற அந்த புகைவண்டி நிலையம்
அடுத்த ஆளற்ற புகைவண்டிக்காக காத்திருக்கும்..
ஓர் அழகிய புகை வண்டி நிலையத்தை கண் முன் நிறுத்திய கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்..
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.