அம்பானியும் அசிம் பிரேம்ஜியும்
பெரிய உழைப்பாளிகள்..
வருடம் முழுவதும் உழைத்து
வானை முட்டும் வீடு கட்டி
இரவை பகலாக்கிக் கொண்டிருக்கும்
பணக்கார உழைப்பாளிகள்..
அய்யாசாமியும் ஆறுமுகமும்
சிறிய உழைப்பாளிகள்..
வாழ்க்கை முழுவதும் உழைத்து
காது குத்தும் பையனுக்கு
கடனுக்கு கடுக்கன் வாங்கும்
ஏழை உழைப்பாளிகள்..
இதில் வீடு எங்கே?
காற்று வாங்க
கடற்கரைக்கு வந்து
சிலையாய் போன
சிறிய உழைப்பாளிகள்
இவர்கள்..
இப்படியாகதான்
இந்தியாவில்
வருடம் தவறாமல்
உழைப்பாளிகள் தினம்...
வணக்கம்
ReplyDeleteமேதினக் கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக.
எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்று ரூபன் உங்களின் கவிதை...நன்றி...
Deleteவித்தியாசமான அருமையான
ReplyDeleteமேதின சிறப்புக் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அய்யா...
Delete