ஒதுங்குவதும் ஒடுங்குவதும் பெண்ணின் தன்மை அல்ல... பயணங்களின் போது பெண்கள் சந்திக்கும் அதிகமான பிரச்சனைகள் உடன் பயணிக்கும் ஆண்களிடம் இருந்துதான் வரவேண்டும் என்பதில்லை. மிதமிஞ்சிய பொறுமையும் கூட பெண்களுக்கு பிரச்சனைகளைக் கொடுக்கும் என்பதை உணர வேண்டும். ஆண்கள் அனைவரும் உத்தமர்கள் என்று கொள்ளவும் முடியாது. தப்பானவர்கள் என முடிவு பண்ணவும் முடியாது. ரயில் பயணங்களின் போது, என் இருக்கையின் அருகில் அமரும் நபர்களை சார்ட்டில் பார்த்துவிட்டுதான் உள்ளே செல்வது என் வழக்கம். நேற்றைய பயணத்தின் போதும் அப்படித்தான். அருகே 81 வயது மூதாட்டி ஒருவரின் பெயர் பார்த்தேன். அவர் எங்கேயிருந்து பயணிக்கத் தொடங்குகிறார் என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன். ஏறி அமர்ந்தேன். அருகில் இருக்கை காலியாகவே இருந்தது அரை மணிநேரம் சென்றிருக்கும். நான்கு கரைவேட்டிக்காரர்கள் வந்தார்கள். என்னருகே ஒருவரும் அருகே மூன்று பேர் அமரும் இருக்கையில் மற்றவர்களும் அமர்ந்துக் கொண்டார்கள். மற்றுமொரு ஐந்து நிமிடத்தில் இன்னும் இரு தொண்டர்கள் அவர்கள் அருகில் வந்து நின்று கொண்டார்கள். சில நிமிட...