Skip to main content

Posts

Showing posts from December 1, 2013

பெண் படிப்பாளி இல்லையா?

நேற்றைய தினம் எங்கள் வீட்டிற்கு ஏசி சர்வீஸ் பண்ண இளைஞன் (பொறியியல் படித்தவன்)  ஒருவன் வந்தான். எங்கள் வீட்டின் அலமாரி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்தான். அதிசயித்துப் போய் ஒரு கேள்வி கேட்டான்.  'இவ்வளவு புத்தங்கங்களை சார் படிச்சிருக்காங்களா?' என்று.  இந்த கேள்விதான் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இதைவிட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு வேறு எதிலும் காணமுடியாது. ஆண் என்பவன் மட்டும்தான் ஆழ்ந்து படிப்பவன் என்று யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது? இத்தனை நூல்களையும் அந்த வீட்டின் பெண் படித்திருக்கக் கூடாதா என்ன? எப்பொழுதுமே பெண் முட்டாளாகவே இருப்பாள் என்று இந்த இளைஞனுக்கு கற்றுக் கொடுத்தது யார்?  அதே போல் என் கணவர் மாற்றலாகி போகும் ஊர்களுக்கு செல்லும் போது அவரின் கீழ் பணிபுரிபவர்கள் என்னிடம் முதலில் கேட்கும் கேள்வி, 'இங்கே இந்த கோவில் பிரசித்தம். அந்த கோவில் பிரசித்தம். கோவிலுக்குப் போகலாமா? ...'  என்பதே.  பெண் என்றால் படிக்கும் திறனற்றவளாகவும் கோவில் மட்டுமே அறிந்திருப்பவளாகவும் காலம் காலமாக நினைக்கும் ஆண்களின் குற...

கோவை பதிவர்கள் சங்கம்...

    என்றென்றும் சிறக்க... KOVAI BLOGGERS ASSOCIATION  Regd No :370/2012  கோவை பதிவர்கள் சங்கம் ஒரு வயது முற்றுப் பெற்று  இரண்டாம் வயதின் ஆரம்பம்... எங்களை வாழ்த்தியவர்கள் ஏராளம் இருந்தும் இன்னும் வளர காத்திருக்கிறோம்... பெயரிலேயே கோவையைப் பதித்து நண்பர்கள் சிலராய் நாங்கள் சேர்ந்து தொடங்க இன்னுமாய் வந்து இணைந்துக் கொண்டார்கள் அனேகம் பேர்... கோவை பதிவர்கள் சங்கம்தான் பதிவர்களுக்கான முதல் சங்கமும் கூட அதில் சற்று பெருமையும் நிறைய உவகையும் உண்டு...  பெண்ணென்றும் ஆணென்றும் பேதமில்லாமல் நட்பு என்னும் கைக்கோர்த்து புன்னைகையை மட்டுமே பரிமாறி சேவை உள்ளத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்... தோப்பு என்னும் கூட்டமைப்பு கொண்டு தொண்டுகள் பல ஆற்றி வருகிறோம் உலக புவி ஈர்ப்பு தினத்தில் புவி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ROBERT BOSCH நிறுவனம் மற்றும் ப்ரூக்பீல்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 வயது முதல்   10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு   நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிச...

இன்னமுமாய்...

மழையின் கேள்வியைச் சுமந்திருந்தது கருமையான அந்த வானம்   அசைவற்ற காற்றைச் சுவாசித்து தூங்கும் முயற்சியில் மரங்கள் சோம்பலாய் நடந்தே சாலை கடந்து புதர் அடையும் காடைகள் நேற்றைய மழைத்துளி நனைத்து    உலரும் வேட்கையில் புற்கள் கம்பளிக்குள் முழுவதுமாய் சுருண்டிருந்த   முகம் தெரியா மூதாட்டி மழை கண்டாலும் சமன்படாது போகும் வாடையின் வாசம் கொடுங்கும் உயிர்களின் காவுக்காக உக்கிரத்தின் முகம் காட்டி வீசிக் கொண்டேயிருக்கிறது இன்னமுமாய்  ஊதல்...