இருண்ட நீலவானை பிளப்பது போல் நெடிய மரத்தின் நீண்டிருந்த இரு கைகளும் இருள் பூசிய இலைகளைச் சுமந்திருந்தன லேசான காற்றிற்கு கோரமாய் நிழல் பரப்பி கருப்பு திவலைகளாய் சிதறியிருந்தன மழைக்கு ஒதுங்கியவளை முழுங்க எத்தனித்தன பெருமழை கண்ட பின்னும் பசி அடங்காதிருந்தன இலைகள் பயம் பின்ன விலகி மழை நனைய நிற்கிறேன் மழையின் வீச்சுக்கு இலைகள் நிழலிழந்து நீர் விட்டன நனைந்துவிட்டவளைக் கண்டு நகைத்து நீர் சொறிந்தன..