தூய்மையாய்... எண்ணிலடங்கா எழுத்துக்களை சுமந்திருப்பதை பெருமையாய் நினைத்ததுக் கொண்டிருந்தது அந்த கரும்பலகை... அதனருகில் அமர்ந்திருந்த அலகு நீண்ட அந்த பறவை வெண்மையான எழுத்துக்களை விடுத்து வண்ண எழுத்துக்களை மட்டும் வெளியே போட்டுக் கொண்டிருந்தது... எழுத்துக்கள் இல்லாமல் தன் நிறம் வெளித் தெரிவதாகவும், வெண்மை மட்டும் தனக்கு போதாது என்றும் கரும்பலகை அதனிடம் சண்டையிட்டது அதனை விட்டுப் போகச் சொல்லித் துரத்தியது... மறுநாளிலிருந்து பறவையைக் காணவில்லை... மகிழ்வாய் வண்ணங்களிலான எழுத்துக்களைக் குவிக்கத் தொடங்கியது கரும்பலகை பின்னொரு நாளில், எழுத இடமின்றி எழுத்துக்கள் வரிசைக் கட்டத் தொடங்கின நீல நிறமும் சிவப்பு நிறமும் சண்டையிடத் தொடங்கின எதை வைப்பது எதை நீக்குவது என்பதில் கரும்பலகைக்கு குழப்பங்கள் உண்டாகியது பாரமாய் உணரத் தொடங்கியது... தன்னை இலகுவாக்கிக் கொள்ள பறவையைத் தேடி அலைந்தது மரப்பொந்தொன்றில்...