நதியே, மௌனத்தைச் சுமந்து நகரும் உன்னின் நிஜம் கொண்டு என் பருவம் தொட்டு தழுவி, அழகின் நிஜம் சுமந்த என் உருவின் நிழலை பிரதியெடுத்து எங்கோ இழுத்துச் செல்லப் பார்க்கிறாய்... கருவின் முடிச்சு தேடும் தாயின் அவஸ்தை போல் மேனியெங்கும் என்னை தேடி அலைகிற தாக்கத்தில் நொடிக்கொரு முறை மாறும் உன் சுழலில் என் நிஜம் அகப்படுமென்ற உண்மை மறுக்கப்படுகிறது... அலையும் உன் பார்வை என் அடி தொடலாம் மனம் தொட்டு திரும்புதல் இயலாது... ஆழத்தின் வேர்களை என்னுள் நுழைத்துப் பார்க்கிறாய் என் மையலின் காரணியை மட்டும் கண்டுப்பிடிக்க முடியாமல் என்னைக் கலைத்து ஏமாந்து திரும்புகிறாய் ஒரு சிறு சலசலப்புடன்....