கடந்த ஒரு மாதமாகவே எங்க வீட்டு போன் ரொம்ப சுறுசுறுப்பா வேலை செய்யுது. நிறைய ராங் நம்பர் அழைப்பா வருது. இதுலே எங்க வீட்டு போன்லே நம்பர் காமிக்கிற டிஸ்ப்ளே வேற வேலை செய்யலை. எனக்கு பொறுமை கொஞ்சம் அதிகம். அதனாலே பொறுப்பா அமைதியா பதில் சொல்லிகிட்டு இருந்தேன். அதுல ஒரு பெண்மணி அடிக்கடி கூப்பிட்டுகிட்டு இருந்தார். முதல்ல நாலைந்து தடவை ராமச்சந்திர அண்ணா இருக்காங்களா என்று தெலுங்கு வாடையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதுவும் சும்மா கேட்கமாட்டார். ரொம்ப பப்பிலி குரலில் பேசுவார். ரொம்ப எரிச்சல் வந்தாலும் அந்த குரலில் உள்ள சந்தோஷம் நம் BP யை கொஞ்சம் குறைத்துவிடும். அப்படி ஒரு அண்ணா இல்லை என்று சொல்லி சலித்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு சத்தமில்லை. நானும் கூட சரியான நம்பரை கண்டுப்பிடிச்சிட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன் மறுபடியும் அந்த பெண்மணியின் குரல். இந்த முறை அண்ணாவை தேடவில்லை. அதற்கு பதிலாக மீனா தானே என்று ஆரம்பித்து தெலுங்கில் ஏதோ சொன்னார். எனக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் ' போன் பண்ணினா வேற நம்பர் போகுது ' என்று அ...