Skip to main content

Posts

Showing posts from April 7, 2013

என் விரல்களில்...

. கள்ளிச் செடிகள் சூழ்ந்திருந்த   அந்த பழைய புகைவண்டி நிலையத்தின் கம்பி வேலி துருப்பிடித்துப் போயிருந்தது... தடவிக்கொண்டே வந்த என் விரல்களை  சிவப்பாக்கிப் பார்த்தன...  இருட்டு மெல்ல கவிழ தொடங்க  நிலவின் மிதப்பில்  மினுமினுக்க தொடங்கின கம்பிகள்... தொட்டுச் சென்ற  என் விரல்களில்  ஒட்டிச் சென்றன  நிலவின் வெளிச்சத் துண்டுகள்...    

நனைந்த தலையணைகள்...

காதலை  தொலைத்த நிமிடங்கள் நினைக்கும் நிமிடங்களை தாண்டி வலியின் வெற்றிடங்களாய்   கண்களில் கரைகட்டச் செய்யும்... நினைவை மறக்க செய்யும் மாயம் ஒன்றுமில்லா இந்த உலகில் நனைந்த தலையணைகள் சொல்லும் கதைகள் அதிகம்... இறக்கும் விளிம்பிற்கு சென்று நிமிரும் நிமிடங்களில் மறுபடியும் இறக்கக் தோன்றும்... மின்மினிகள் ஒளி வீசி செல்லும் வீதியில் நிலவை தொலைத்துவிட்டு தேடும் இரவுகள் மட்டும் வெளிச்சமாய் தொலைத்ததைத் தேடிக்கொண்டிருக்கும்...