Skip to main content

Posts

Showing posts from March 10, 2013

அந்த பறவையின் சிறகு...

பறக்க எத்தனிக்கையில் படபடக்கும் அந்த பறவையின் சிறகின் சத்தம் உதிர்த்த இளம் இறகொன்று   காற்றின் வளைவில் மிதந்து ரோஜாவின் அருகாமை தவிர்த்து அதன் முள்ளின் மேல் அமர கிழிபடுமே என்கிற என் மனதின் பதைப்பு   விரலாய் அதை விடுவிக்க மேலெழுந்து என் முகம் தொட்டு முத்தமிட்டு சந்தோஷ கணங்களை தெளித்துவிட்டு காற்றோடு காணாமல் போனது....