Skip to main content

Posts

Showing posts from February 17, 2013

நினைவிற் நிழலாடிய...

நினைவிற் நிழலாடிய கற்பிழப்புகள் அதற்கு சாட்சியான கள்ளிப்பூக்கள்....   காட்டுக்குள் நுழையும் காலடி சத்தங்கள் கள்ளிப் பூக்களின் காதுகளுக்கு முள்ளாய் நிற்கும் புற்களின் மேல் அழுத்தமாய் பூட்ஸ் கால்கள் ஓலை வேயப்பட்ட கூரையில் தட்டியால் தட்டப்படும் ஓசை திறக்கப்படும் கதவின் வழியே இழுபட்டு மிதிபடும் ஆண்மகன்   கற்பு சீலை கிழிக்கப்பட்டு கதறும் பெண்ணின் ஓலம் மனிதத்தின் மொத்தமும் மரணமாய் மாறும் அவலம் ஆண்டானின் அதிகார கைகள் ஆர்ப்பரிக்கும் அனர்த்தமாய் நித்தமும் கொடுக்கும் பிச்சையாய் வரம்பில்லா கற்பில் பெண்பிள்ளைகள் அடுத்த குடிசையின் உள்ளிருந்து நாளை நமக்கு இப்படி விடியுமென்று....

விஸ்வரூபம்

இந்த படம் பண்ணிய பிரச்னை எல்லோரும் அறிந்ததே. அப்படி ஒன்றும் இதில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.  வெறும் பேப்பரில், டிவியில் மற்ற மீடியாக்களில் வந்த ஆப்கானிஸ்தான் பற்றிய விவரங்களை சேகரித்து கோடிக் கணக்கில் கொட்டியதாக(?) சொல்லி படம் பண்ணி வியாபாரம் செய்ய வழி தேடி கடைசியில் அம்மாவுடன் under table dealing பண்ணி சமர்த்தாக படத்தை விற்றுவிட்ட சந்தோஷம் கமலஹாசனின் முகத்தில் தெரிந்தால் அது ஆச்சிரியபடுவதற்கு இல்லை.  இதில் ஏமாந்தவர்கள் கமலின் ரசிகர்கள் தான். படத்தை பார்க்க ப்ளைட் பிடித்து ட்ரெயின் பிடித்து அடுத்த மாநிலத்துக்கு எல்லாம் போய் காசை செலவழித்து இந்த ஒன்றுமே இல்லாத டாகுமெண்டரி படத்தை பார்க்க போன அவர்களை சொல்லணும். படத்தில் ஒன்றுமில்லை என்பது தெரிந்தவுடன் ஆஹா..ஓஹோ ...என்று பொய்யாய் பிரசாரம் செய்து மனச் சமாதானப்பட்டுக் கொண்டார்கள். பாவம் தான்....அடுத்த முறை சூடு போட்டுக் கொள்ளமாட்டார்கள். நம்புவோம்..... நான் இப்படி எழுதுவதற்காக, 'அறிவு ஜீவிகளுக்கு தான் புரியும் இந்த கதை' என்கிற கதையெல்லாம் இங்கு வேண்டாம். நாலு இங்கிலீஷ் படத்தையும் ஐந்த...