Skip to main content

Posts

Showing posts from January 13, 2013

ரயில் பயணங்களில் 2....

பெண்களின் உடை.... இந்த முறை ரயில் பயணம் முடிந்து சென்னை இறங்கும் முன் சற்று நேரம் பேசின் ப்ரிட்ஜ் ரயில் நிலையத்தில் வண்டி நின்றது.  நம்ம ஊரு மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. அவ்வளவு நேரம் அமைதியா ட்ரெயின்ல உட்கார்ந்திருப்பாங்க. இறங்கும் ஸ்டேஷன் நெருங்கும் முன்னரே எல்லோரும் மூட்டை முடிச்சுடன் கதவு கிட்டே போய் நிப்பாங்க.  இந்த நல்ல பழக்கம் ட்ரெயின் மட்டுமில்ல, சின்னதா வானத்தில பறக்குமே ஏரோப்ளேன் அதுல கூட அப்படிதான். லேண்ட் ஆகிட்டோம்னு பைலட் சொன்ன உடனே கதவை கூட ஏர் ஹோஸ்டஸ் திறக்கவிடாம க்யூ கட்டி நிப்பாங்க.... ரயில் வண்டி நின்ற கொண்டிருந்த அந்த பதினைந்து நிமிடத்தில் நடந்த விஷயம் தான் இது. இருபதுகளில் ஒரு பெண் தன் இரண்டு வயது குழந்தையுடன், அறுபதுகளில் ஒரு மனிதர் அவளின் மாமனார்.  என் சீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தாள் குழந்தையுடன். அருகில் நிற்பவர்களிடம் எல்லாம் அந்த குழந்தை பேசி சிரித்துக் கொண்டிருக்க அவளும் பேசிக் கொண்டிருந்தாள். இளைஞன் ஒருவனும் அதனிடம் பேசி சிரிக்க குழந்தையும் அவன் சட்டையை பிடித்து இழுக்க இவளும் சிரித்து பேச...