சோறு ஊட்டும் போதும், தூங்க செய்யும் போதும் ஒரு தாய் தன் குழந்தைக்கு பூச்சாண்டியை வைத்து படமும் பயமும் காட்டுவாள்... சாப்பிடும் போது பூச்சாண்டியை நினைக்கும் ஒரு குழந்தை தான் பலசாலியாகி அந்த பூச்சாண்டியை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற தைரியம் பெறும்... தூங்கும் போது அவனை நினைக்கும் ஒரு குழந்தை யாரையும் ஏற்றுக் கொள்ளவோ எதிர்க்கவோ தைரியமற்று தன் அன்பில் இருப்பவர்களையே காயப்படுத்திப் பார்க்கும்... இவை அனைத்தும் பூச்சாண்டியை அறிமுகப்படுத்தும் அந்த தாயிடம் தான் இருக்கிறது... அவளின் அந்த செயல் தவறில்லை - ஆனால் அதை போராடி வெற்றி கொள்ளும் தன்மை அல்லது அதை பார்த்து பயந்து ஒளிந்து கொள்ளும் தன்மை இரண்டில் எதை அவள் கற்று தருகிறாள் தன் குழந்தைக்கு என்பதில் தான் அக்குழந்தையின் வாழ்வின் சூட்சமமே அடங்குகிறது.... ஆறடி உயர்ந்த மனிதனாய் வளர்ந்து நாலு பேரை அடித்துவிட்டால் அவனை தான் தைரியமாய் வளர்த்திருக்கிறோம் என்று பெற்றோர் பெருமை கொள்ள முடியாது.... பிரச்சனைகளை மனதளவில் சந்திக்கும் தைரிய...