மழையின் கேள்வியைச் சுமந்திருந்தது
கருமையான அந்த வானம்
அசைவற்ற காற்றைச் சுவாசித்து
தூங்கும் முயற்சியில் மரங்கள்
சோம்பலாய் நடந்தே சாலை கடந்து
புதர் அடையும் காடைகள்
நேற்றைய மழைத்துளி நனைத்து
உலரும் வேட்கையில் புற்கள்
கம்பளிக்குள் முழுவதுமாய் சுருண்டிருந்த
முகம் தெரியா மூதாட்டி
மழை கண்டாலும் சமன்படாது
போகும் வாடையின் வாசம்
கொடுங்கும் உயிர்களின் காவுக்காக
உக்கிரத்தின் முகம் காட்டி
வீசிக் கொண்டேயிருக்கிறது
இன்னமுமாய்
ஊதல்...
ஊதலுக்கு தெரியாது...!!!
ReplyDeleteநன்றி...
Deleteகட்டுரை போட்டியில் கலந்து கொள்ள :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html