ஆக்கிரமிக்க தொடங்கியது
அலை
கரையின் காலடித்
தடங்களை...
மணல் விட்டு நகரத்
தொடங்கிய
அந்த தேகத்தைக் களவாடி
உள்ளிழுத்துச் சென்று
அசையா நீரில் பாய்மரமாக்கிவிட்டு
காற்றின் வசீகரத்திற்கு
ஆட்பட்டு
காணாமல் போய்விட்டது
அலை..
நீரின் சலனமாய் வந்த
சுழலின் சுவாசம்
தேகத்தின் வாசனை நுகர்ந்து
ஆழியின் உள்நோக்கி
இழுத்துச் சென்றது...
மௌனம் மட்டுமே
சுமந்து
இறுகியிருந்த இதயமோ
அடிநோக்கி பயணிக்க
மறுத்து
நீரின் மேல் தொட்டும்
விரையும்
காற்றின் விரல்
பிடித்து
கடலினுயர்ந்த
அடர்ந்த தீவுக்குள் நுழைந்தது...
சருகுகளின் பரப்பின்
மீதும்
கிளைகளின் ஊடாகவும்
இழுத்துச் சென்றக்
காற்றை
சற்றேனும் நிறுத்தாமல்
இயைந்து துவண்டது...
உரசலின் காயங்கள்
இறுக்கம் சூழ்ந்த அந்த இதயத்தின்
மௌனத்தை உதறவைத்து
வலியின் வார்த்தைகளைக்
காற்றுவெளி எங்கும்
பரப்ப
மகிழ்வாய் ஒடுங்கியது அது
மீண்டும் தேகத்தின்
கணப்புக்குள்...
அசையும் நீரின் மட்டம்
தொட்டு
அலையின் சுருளில்
மறுபடியும் கரை கண்டது
தேகம்...
அழகான அருமையான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.
நன்றி குமார்...
Deleteபொதுவாய் தேகம் கரையிலிருக்க மனம் மட்டும் அலைகளினூடே ஆழ்கடல் சென்று மீளும். இங்கே அலைகளினால் அலைக்கழிக்கப்படும் ஒரு தேகம் இறுதியில் கரைசேர்ந்துவிடுவது அருமை. வார்த்தைகள் வசப்படுகின்றன உங்களுக்கு. பாராட்டுகள் அகிலா.
ReplyDeleteதேகம் ஆழ்கடலினுள்ளும் மனம் நீர்பரப்பின் மீதும் பயணித்து தனக்குரிய அமைதியைத் தேடுவது என்பது நீங்கள் கூறியதுபோல் சற்று வித்தியாசமே..நன்றி உங்களின் ரசிப்புக்கு...
Deleteவணக்கம்
ReplyDeleteமனதை நெருடிய அருமையான கவிதை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்...
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மிக்க நன்றி ...
Delete