நிறுத்தம் ஒன்றில்
தொப்பை சுமந்த கணவனும்
செப்புச் சிலையாய் அவன் மனைவியும்
சம்பந்தமேயில்லாமல் பேருந்தின் உள்
ஒலித்துக் கொண்டிருந்தது,
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்று...
வைசியாள் வீதியின் வளைவில்
நெருங்கி கடக்கும் பேருந்தில்
சிறு மார்பு நசுங்க
பட்டுசட்டையணிந்த பெண்குழந்தையும்
அருகாய் கண்களை உறுத்திய
துருக் கோர்த்த ஜன்னல் கம்பிகளும்...
செல்வபுரத்து நீர்நிலை தொட்ட ஈரக் காற்று
ஏதோ ஒரு பறவையின் மணத்துடன்
நாசியை நனைக்க...
வெள்ளையடிக்கப்பட்ட மூடுகளுடன் தென்னைகள்
வரிசையாய் தோப்புக்குள்
பண்ணைக்காரனின் பவிசைக் காட்டியபடி நிற்க...
கண்ணயர விடாமல் கடக்கும் காட்சிகளைக்
கவிதை மறந்து காற்றாய்ச் சுவாசிக்க
இறங்க மறுத்த மனதை பயணிக்கவிட்டு
நிறுத்தத்தில் தரைத் தொட்டேன்
நான் மட்டுமாக...
This comment has been removed by the author.
ReplyDeleteஇறங்க மறுத்த மனதை பயணிக்கவிட்டு.... G+ இணைப்பு கொடுத்தால் (facebook-ல்) உங்களின் தளத்திற்கு (குறிப்பிட்ட பதிவிற்கு) செல்ல எப்படியும் ஒரு அரை மணி நேரம் ஆகும்... மாற்றுங்கள்... மாறுங்கள்... அன்புடன் DD
Deleteசரி தனபாலன்...
Deleteநன்றி...
//இறங்க மறுத்த மனதை பயணிக்கவிட்டு நிறுத்தத்தில் தரைத் தொட்டேன்
ReplyDeleteநான் மட்டுமாக...//
அருமையான வரிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி ஐயா....
Delete///அருமை///
ReplyDeletehttp://www.thamizhmozhi.net
தமிழ்மொழி.வலை
நன்றி...
Deleteஉங்களோடு சேர்ந்து நானும் ரசித்தேன்...
ReplyDeleteரசிப்பதுதானே அழகு எழில்...
Deleteஎங்களையும் பயணப்பட வைத்து இறங்க மறுக்கும் மனதையும் தந்துவிட்டீர்களே...
ReplyDeleteஹாஹா...நன்றி குமார்...
Deleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் கற்பனை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்...
Deleteம்.. அழகு..
ReplyDeleteரசித்தேன்...
நன்றி சௌந்தர்...
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ரவி...
Deleteதொப்பை சுமந்த கணவனும் அவனை மனதில் சுமந்த மனைவியும் காட்சியை சுமந்த கவிஞரும் கவிதை படித்தபின்பும் மனதில் இருந்து இறங்க மறுகின்றனரே
ReplyDeleteஜன்னலோர பேருந்திலிருந்து லைவ் டெலிகாஸ்ட் அருமை ..
ReplyDelete