உயிர் நிலைக்க இருட்டின் சுவற்றில் அப்பிக் கொள்கிறது
குரல் மூடி தவமிருக்கிறது பகலுக்காக...
இன்னுமொரு அழைப்பு காற்றில்
இப்போது துணையிடமிருந்து...
பதில் எழுப்ப முனைகையில் எச்சரிப்பு அருகிலிருந்து
அமைதி காக்கவே ஒரு தவிப்பு அதற்கு
தொடரும் துணையினது அழைப்பு
காரைப் பெயர்ந்த சுவற்றில் குரலின் திசை தேடி நகர
மிருக வாசனை அருகே நுகர
துள்ளி விழுந்தது தரையில்...
கொல்லும் பயம் நகரவிடாமல்...
கோரைபாயின் வாசம் அருகில்
ஒடுங்கிக் கொண்டது அதனுள்...
நெருக்கமாய் பாயின் முனகல்கள்
ஏக்கமாய் ஒரு இரவு...
சில்வண்டின் தவிப்பு உயிருக்கும் உணர்வுக்கும் இடையிலான ஊசலாட்டம். சிலந்தியை நினைத்துப்பார்க்கிறேன். காதலே உயிரைப்போக்கும் என்று அறிந்தும் தேடிப்போகிறதே துணையை!
ReplyDeleteபணியும் வாழ்க்கைச்சுமையும் துரத்த காதலைத் துறந்து கண்காணா தேசத்தில் வாழும் நிர்ப்பந்தம் கொண்டவர்களையும் நினைத்துப்பார்க்கிறேன். கவிதையின் ஆழம் அதிகம். சொல்லாமல் சொல்லும் செய்திகளும் அதிகம். பாராட்டுகள் அகிலா.
உங்களின் புரிதலுக்கு நன்றி கீதா....நன்றி...
Deleteமிருகம் சிரமம்...@!
ReplyDeleteமிக ஆழமான வலி நிறைந்த கவிதை.
ReplyDeleteநன்றி ராஜி...
Deleteஅன்பின் அகிலா - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - கவிதை அருமை - துயரத்திலும் துணை தேடி ஓடும்போது மிருக வாசனை முகர்ந்து - பயந்து கோரைப் பாயினுள் ஒடுங்க ஏக்கத்துடன் ஒர்ரிரவு கழிந்தது - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி சீனா...
Delete