பள்ளி சென்ற காலத்திலிருந்து
எத்தனையோ சுதந்திர தினங்கள்
கண்முன்னே கழிந்தன...
முதிர்வில்லாத வயதில் இந்த தினம்
இனிப்பின் மறுவடிவமாய்...
சற்று அறிவு தெளிந்த நிலையில்
நம் சுதந்திரம் என்று நெஞ்சை நிமிர்த்திய ஞாபகம்...
சமூகத்தை உணரும் இந்த வயதில்
அதன் முகம் மனிதர்களின் முகமாகிப் போனது...
வாதனைகளின் பாதைதானே வாழ்க்கை என்று
தினம் கழிக்கும் அநேகம் பேருக்கும் கூட
இன்று சுதந்திர தினம் தான்
நேற்று, நாளை போல் இன்றும் ஒரு நாள் தான்...
வறுமை, இனம், சாதி பிரிவு ஒழித்து
பாலின வன்முறைகளைக் கொளுத்தி
சமூகம் உயர்த்தி
சுதந்திரத்தை அர்த்தப்படுத்தினால்தான்
இன்றைய நாளும் சுதந்திரமாகும்...
செய்வோம்...
சுதந்திரதின வாழ்த்துக்கள்...
~ அகிலா...
ReplyDeleteசுதந்திரதின வாழ்த்துக்கள்.
நன்றி...
Deleteவாதனைகளின் பாதைதானே வாழ்க்கை .(வேதனைகளின்)சரி செய்யவும்
ReplyDeleteசுதந்திரதின வாழ்த்துக்கள்
நன்றி திருத்தத்திற்கும் வாழ்த்துக்கும்...
Deleteஅழகிய கவிவரிகள்!
ReplyDeleteஇனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !
நன்றி...
Deleteசுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ..”முதிர்வில்லாத வயதில் இந்த தினம்
ReplyDeleteஇனிப்பின் மறுவடிவமாய்...” நிஜம்தான். அழகான கவிதை அகிலா.
நன்றி விச்சு...
Deleteசுதந்திர தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteவலைச்சர வாரத்துக்கு வாழ்த்துக்கள்....
ReplyDelete