கடந்த காலத்தின் மீள்வாய்
ஏதோ ஓன்று நடந்தேவிடுகிறது...
பூட்டிட்டுக் கொண்டு
சுவற்றின் பொந்துத் தேடி
அதனுள் ஒட்டியிருந்தாலும்
சாளரம் திறந்து வந்து இழுத்தே சென்றுவிடுகிறது...
பள்ளத்தாக்கின் வாசலில் நிறுத்தி
உள்ளே வருகிறாயா என்கிறது
பிடி விலக்கி முகடு தொட நினைத்து
ஓடும் பயணத்தின் வெளியை
மேகமாய்த் தழுவி
இன்னுமாய் சலனப்படுத்துகிறது...
அதன் சுவாசத்தில்
நான்தான் நீ என்கிறது...
ஆட்கொண்டு விட்டு, மமதையாய்,
‘’இருந்துக் கொள்’ என்று விட்டுச் செல்கிறது...
கண்ணீரின் கழுவலில்
சுவற்றின் பொந்துக்கே திரும்ப நேருகிறது...
கடந்த காலத்தின் மீள்வாய்
ஏதோ ஓன்று நடந்தே ஆகிறது...
நன்றாக இருக்கிறது :)
ReplyDeleteநன்றி...
Delete