இருட்டை மையப்படுத்திய இரவின் நாக்கு ஓன்று
விம்மிக் கொண்டே கல்லறையின் கற்சுவரை உடைத்தெறிந்தது...
கடைசியாய் மிச்சமிருந்த மல்லிகையின் வாசத்தை அணிந்துக்
கொண்டு
அவனின் மௌனத்தின் வாசம் தேடி அலைந்தது...
பந்தலிட்ட அந்த பெரிய வீட்டின் வாசலில் நின்று
உச்சஸ்தாயில் பெயரிட்டு உரக்கக் கத்தியது....
ஜன்னலின் இடுக்குகளில் வெளிச்சக் கீற்றுகள் தோன்றின...
உள்ளிருந்த அந்த மௌனத்தின் பிம்பம்
அவனின் இருப்பை உறுதிப்படுத்தியது...
உயிரின் வெறி அதனுள் தீப்பந்தமாய்
உள் நுழைந்து அவனின் மௌனம் உடைத்து வெளியேறியது
பெருத்த குரலெடுத்து அவன் ஓலமிட
சாத்வீகமாய் திரும்பியது கற்சுவருக்குள்...
"போய்" சேர்ந்து விட்டானா...?
ReplyDeleteஅவன் மௌனம் மட்டுமே போய் சேர்ந்தது...:)
Deleteதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteஅவனும் அவளுடன் கலந்துவிட்டானா?
ReplyDeleteஅவளை காயப்படுத்திய அவனின் மௌனம் மட்டுமே உடைத்து எறியப்பட்டது அவளால்...
Deleteபுரியுது ..ஆனா புரியல ..இருந்தாலும் கோனார் கைடு ப்ளீஸ் ..ம்ம்ம்..பள்ளிகூடத்தில தான் தமிழ் இலக்கியங்களுக்கு கைடு உதவி தேவை பட்டது இங்கேயுமா ..
ReplyDeleteஆழ்ந்த மௌனங்கள் எல்லாமே அர்த்தம் பொதிந்தவையாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவை அருகில் இருப்பவர்களை, உயிராய் நேசிப்பவர்களை கொன்றேவிடும் சில சமயங்களில்....
Deleteஅவ்வாறு மனம் மரித்து போன ஒரு பெண்ணின் பிம்பம் அவனின் மௌனத்தை மட்டும் அவனிடமிருந்து பறிப்பதாக ஒரு கற்பனை கவிதை தான் ராஜன் இது....
வணக்கம் !
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி .வலைச்சரத்தில் இன்று தங்களை அறிமுகம்
செய்துள்ளனர் .மிகவும் ரசித்தேன் .தங்களின் எழுத்துக்கள் என்
மனதையும் கவர்ந்ததனால் தங்களைப் பின் தொடர்வதிலும் பெருமை
கொள்கின்றேன் .வாழ்க தங்களின் தமிழ் பணி .
http://blogintamil.blogspot.ch/2013/07/tamil-poets-in-blogs.html
நன்றி உங்களுக்கு...நானும் பார்த்தேன்...மகிழ்ச்சியே என் சிறு எழுத்துக்களையும் தாங்கள் படிப்பது ...நன்றி...
Deleteஅன்பின் அகிலா - 19.08.2013 வலைச்சரப் பதிவில் தங்களது சுய அறிமுகப் பதிவின் மூலமாக இங்கு வந்தேன் - கவிதை அருமை - வாசகணுக்குக் சற்றே சிரமம் புரிந்து கொள்வது. இங்கு ராஜனின் மறுமொழிக்குத் தங்களின் மறுமொழி படித்தேன். இப்பொழுது கவிதை புரிகிறது. கவிதை நன்று - அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபுரிதல் சற்று சிரமம் தான்...நன்றி சீனா...
Delete