வானத்தின்
பின் ஒளிந்த இந்த மலைமுகடு
மெல்லிய
வரைபடமாகவே கண்ணுக்கு....
ஆங்காங்கே
பசுமை கண்ணில் பட
கருமையா
நீலமா என்று அனுமானிக்க முடியாத வண்ணத்தில் இருந்தது...
அதன்
உயரத்தை மீறி பறக்கும்
பறவை
அதை
உற்று நோக்கிவிட்டு தான் செல்கிறது
மலையின்
வியாபம் அதை ஈர்க்கிறது போலும்
முகட்டை
நோக்கி பயணிக்க அதற்கும் தயக்கம்தான்...
மேக
மூட்டைகளுக்கு மட்டும் அந்த பயமில்லை
அதன்
மீதேறி அமர்ந்துக் கொண்டது
அந்த
மலைமுகடும் வண்ணத்தை மாற்றி
மகிழ்ச்சியை
மட்டும் பூசிக்கொண்டது....
ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
good
ReplyDelete