காதலை
தொலைத்த நிமிடங்கள்
நினைக்கும் நிமிடங்களை தாண்டி
வலியின் வெற்றிடங்களாய்
கண்களில் கரைகட்டச் செய்யும்...
நினைவை மறக்க செய்யும்
மாயம் ஒன்றுமில்லா இந்த உலகில்
நனைந்த தலையணைகள்
சொல்லும் கதைகள் அதிகம்...
இறக்கும் விளிம்பிற்கு சென்று
நிமிரும் நிமிடங்களில்
மறுபடியும் இறக்கக் தோன்றும்...
மின்மினிகள் ஒளி வீசி செல்லும் வீதியில்
நிலவை தொலைத்துவிட்டு தேடும்
இரவுகள் மட்டும் வெளிச்சமாய்
தொலைத்ததைத் தேடிக்கொண்டிருக்கும்...
ம்
ReplyDeleteசொன்னவிதம்
நனைந்த தலையனைகள் அருமை
உங்கள் பதிவு அருமை.......ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நனைந்த தலையணைகள் உண்டு அந்த தலையணைகள் அறியாத ரகசியங்கள் உண்டா என்ன?
ReplyDeleteதலையனைகளுக்கு தான் நம்மை பற்றி அதிகம் தெரிந்திருக்கும் நண்பா...
Deleteஇறக்கும் விளிம்பிற்கு சென்று
ReplyDeleteநிமிரும் நிமிடங்களில்
மறுபடியும் இறக்கக் தோன்றும்...
மிக மிக அருமை
உங்கள் சிந்தனையின் ஆழத்திற்கு
வார்த்தைகளும் உடன்பட்டு
கவிதையை மேலும் அழகுபடுத்துகின்றன
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கு என் நன்றிகள்...
Deletetha.ma 1
ReplyDeleteநன்றி ஐயா...
Deleteஅந்தக் கதைகள் தான் சுகமே...!
ReplyDeleteசுமையும் சோகமும் கூட...
Deleteமறுபடி மறுபடி இறப்பதும் மகிழ்ச்சிதானே
ReplyDeleteம்ம்ம்....
Deleteநிலவை தொலைத்துவிட்டு தேடும்
ReplyDeleteஇரவுகள் மட்டும் வெளிச்சமாய்
தொலைத்ததைத் தேடிக்கொண்டிருக்கும்..மின்மினிகள் ....அருமை
நன்றி ராஜேஸ்வரி...
Deleteநினைவை மறக்க செய்யும்
ReplyDeleteமாயம் ஒன்றுமில்லா இந்த உலகில்//
இரு வேறு சிந்தனையை பதிய வைக்கிறீர்கள்
நாடி கவிதைகள்
நன்றி நண்பா...
Deleteஅருமையான கவிதை காதலின் வலி சோகம் உங்கள் கவிதையில்
ReplyDeleteம்ம்ம்...உண்மைதான்...
Deleteமனதை வருடிய கவிதைகள் அகிலா... நான் என் முக நூலில் கூட பகிர்ந்து கொண்டேன்
ReplyDeleteபார்த்தேன் எழில்...நன்றிப்பா...
Delete