பறக்க எத்தனிக்கையில் படபடக்கும்
அந்த பறவையின் சிறகின் சத்தம்
உதிர்த்த இளம் இறகொன்று
காற்றின் வளைவில் மிதந்து
ரோஜாவின் அருகாமை தவிர்த்து
அதன் முள்ளின் மேல் அமர
கிழிபடுமே என்கிற என் மனதின் பதைப்பு
விரலாய் அதை விடுவிக்க
மேலெழுந்து என் முகம் தொட்டு முத்தமிட்டு
சந்தோஷ கணங்களை தெளித்துவிட்டு
காற்றோடு காணாமல் போனது....
தென்றலாய் மனதையும் வருடி விட்டுச் சென்றது...
ReplyDeleteநன்றி தனபாலன்...
Deleteசிறகு பறப்பதையும் ரசிக்கும் மனது...அடடா
ReplyDeleteம்ம்ம்...
Deleteம்ம்ம் ..அருமை
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteஅருமை..
ReplyDeleteநன்றி....
Deleteஉதிர்ந்த இறகிற்கும் நன்றி உணர்வு ..நல்ல வடிவமைப்பு ..ஆனால் சில உள்ளங்களுக்கு தேவை உதவும் உணர்வும் ..உதவி பெற்று கொண்ட உள்ளங்களுக்கு நன்றி உணர்வும் ..அருமை ..
ReplyDeleteநன்றி ராஜன்...
Delete