விடியலின் முன்னமே
தூக்கம் கலைத்தது கனவொன்று
மணக்கோலத்தில் உன்னை காட்டி...
நீ இல்லாத திருமண நாளை நினைவுபடுத்தி...
நீ இல்லாத திருமண நாளை நினைவுபடுத்தி...
உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள்
உன் தோள் சாய்ந்து அமர்ந்திருந்த மாடிப்படிகள்
குழந்தைகளை உன் மேல் சாய்த்து நீ அமரும் ஊஞ்சல்
சட்டைமாட்டியில் உன் கட்டம் போட்ட சட்டை
அதன் பையில் அமர்ந்திருக்கும் ஊதா நிற பேனா
விஷ்ணு சக்கரமாய் உன் விரலையே சுற்றிக்
கொண்டிருக்கும் வண்டி சாவி
எல்லாம் என் கண் முன்னே
உன்னை ஞாபகபடுத்திக் கொண்டு....
இவற்றுடன் நானும் இவ்வுலகில்
ஒரு அஃறிணையாய்...
பிரிவின் வலி...!
ReplyDeleteம்ம்ம்...
Deleteகாகித கப்பலில் மழை நீரில் விட்ட படகுகளின் பால்ய வயது நினைவுகள் நிழல்காலங்களின் மாற்றங்களில் மூழ்கி போனாலும் தீடிரென்று வரும் அந்த எண்ண அலைகள் எவுளவு வலிமையானது என்று இந்த பாடல் வரிகள் உணர்த்துகின்றன வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராஜன்...
Deleteபுகைப்படத்துடனான வலி புரிகிறது அகிலா...
ReplyDeleteஉண்மைதான்...கணவனை இழந்து வாழ்வதன் வலி அது...
Deleteஏங்க இப்படி மனதை கனக்க வைக்கிறீங்க...?
ReplyDeleteஇன்று என் தம்பியின் திருமண நாள்...அவன் இப்போ உயிருடன் இல்லை. தம்பி மனைவி கொஞ்சம் சங்கடப்பட்டாள்...அதில் பிறந்ததுதான் இந்த கவிதை...
Deleteஇதை சொல்லாமல் இருந்திருக்கலாம். இன்னும் கனக்கிறது மனது.
Deleteவாழ்வின் தடங்கள் வகுக்கப்பட்டவை...நான் அதில் நடந்து செல்கிறோம்...அவ்வளவே...
Deleteகாணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நினைவலைகள் ....
ReplyDeleteஅதன் பாதிப்புக்கள்...
Deleteபுகைப்படமே போதும்......
ReplyDeleteஆமாம்...
Delete