ஆவணப்படம்...
கடந்த ஞாயிறு மாலை என் தோழி கீதா இளங்கோவன் அவர்களின் 'மாதவிடாய்' என்னும் ஆவணப்படம் கோவையில் திரையிடப்பட்டது. அன்று அது சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது.
பெண்பிள்ளைகளின் மாதவிடாய் சிரமங்கள் குறித்த குறும்படம் இது. மிகவும் அருமையாய் எடுக்கப்பட்ட ஒரு படம்.
இந்த படத்தை அவரும் அவரின் கணவரும் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள். இது ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் ஆண், பெண் இருபாலாருமே பார்க்கவேண்டிய படம்.. குறிப்பாக பெண்களும் அவர்களின் பெண்குழந்தைகளும் பார்க்க வேண்டியது அவசியம்.
மாதவிடாய் என்பது என்ன, கிராமப்புறங்களில் அதை எவ்வாறு நடைமுறை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி அந்த பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள், அந்த சமயங்களில் சுகாதாரமாய் இருக்க செய்யவேண்டியவை என்று நிறைய விஷயங்களை இந்த ஆவணப்படம் உள் அடக்கியிருக்கிறது.
இத்திரைப்படம் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மாதவிடாய் குறித்த மக்களின் நடைமுறை பிரச்சினையை எடுத்துரைக்கிறது. அங்கு பழக்கத்தில் உள்ள முட்டு வீடு என்னும் ஒரு விஷயமும் கவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குறும் படத்தில் மாதவிடாய் காலங்களில் பள்ளிகளில் பொது இடங்களில் பெண்களின் கழிப்பறை வசதிகளை பற்றியும் குறிப்பிட்டு சொல்லியுள்ளார்கள். ஆரோக்கியம் என்பது எவ்வளவு முக்கியமானது இந்த மாதிரி சமயங்களில் என்றும் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
கோவில் மற்றும் வீடுகளில் நடக்கும் விசேஷ நாட்களில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாதவிடாயை தள்ளி போடும் மாத்திரைகளையும் சாப்பிடுகிறார்கள்.. அது பெண்களின் ஹார்மோன்களில் மாற்றங்களையும் மெனோபாஸ் காலத்தில் அவளின் உடல்நிலையை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
யாராவது இந்த படத்தை உங்கள் ஊரில் திரையிட விரும்பினால் கிட்டத்தட்ட ஐம்பது பேருக்காவது இதை திரையிட்டு காட்டவேண்டும் என்பது இந்த ஆவண படம் எடுத்த கீதா அவர்களின் நியாயமான விருப்பம்.
ஏனென்றால், தனியாக வீடுகளில் அமர்ந்து பார்ப்பவர்கள் மௌனமாய் பார்த்துவிட்டு அதை பற்றிய கலந்துரையாடல் எதுவுமின்றி எழுந்து போய்விடுவார்கள். பொதுவாய் பார்க்கும் போது கலந்துரையாடல் நடைபெற்று இன்னும் ஒரு ஐம்பது பேருக்கு போய் சேரும் இந்த நல்ல விஷயம்.
இது தொடர்பான விவரம் மற்றும் டிவிடி (DVD) கிடைக்க கீதா இளங்கோவனை இந்த மெயில் ஐடி geetaiis@gmail.com யில் அணுகலாம்.
கலந்துரையாடல்
வரவேற்போம் இது போன்ற நல்ல விஷயங்களை....
இந்த ஆவணப் படத்தை நானும் காணவேண்டும் என்ற
ReplyDeleteஆவலில் இருந்தேன்...மின்னஞ்சல் முகவரி கொடுத்து
அதற்கு வழிவகுத்தமைக்கு நன்றிகள் பல சகோதரி........
எனக்கும் இதைபார்த்த பின்பு அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுமென நினைக்கிறேன் குறிப்பாக எனது குடும்ப நபர்களும் காணவேண்டும்
ReplyDeleteவரவேற்போம்... அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியதும் கூட... நன்றி சகோதரி...
ReplyDeleteவரவேற்போம் இது போன்ற நல்ல விஷயங்களை.... //
ReplyDeleteஉண்மை, இது போனற நல்ல விஷயங்கள் வரவேற்க வேண்டும்.
நன்றி.
நன்றி தோழி.
ReplyDelete