நினைவிற் நிழலாடிய கற்பிழப்புகள்
அதற்கு சாட்சியான கள்ளிப்பூக்கள்....
காட்டுக்குள் நுழையும் காலடி சத்தங்கள்
கள்ளிப் பூக்களின் காதுகளுக்கு
முள்ளாய் நிற்கும் புற்களின் மேல்
அழுத்தமாய் பூட்ஸ் கால்கள்
ஓலை வேயப்பட்ட கூரையில்
தட்டியால் தட்டப்படும் ஓசை
திறக்கப்படும் கதவின் வழியே
இழுபட்டு மிதிபடும் ஆண்மகன்
கற்பு சீலை கிழிக்கப்பட்டு
கதறும் பெண்ணின் ஓலம்
மனிதத்தின் மொத்தமும்
மரணமாய் மாறும் அவலம்
ஆண்டானின் அதிகார கைகள்
ஆர்ப்பரிக்கும் அனர்த்தமாய்
நித்தமும் கொடுக்கும் பிச்சையாய்
வரம்பில்லா கற்பில் பெண்பிள்ளைகள்
அடுத்த குடிசையின் உள்ளிருந்து
நாளை நமக்கு இப்படி விடியுமென்று....
மிகவும் கொடூரமான நிகழ்வு காவல் காக்கும் காவல்துறை கற்பை சூறையாடும் துறையாகி போன அவலம் வாசத்தி சம்பவம் ,பாதிக்க பட்ட மக்கள், சமூகம் வெகுண்டு எழும் போது புரட்சி வெடிக்கிறது அதற்கு பழிவாங்க எழும் இளைஞர் கூட்டம் தீவிரவாதிகளாக உருவாகிறார்கள் சமுதாயத்தின் அமைதி கெடுகிறது ஆகையால் தவறு செய்பவன் ஆண்டான் அடிமை என்ற பாகுபாடு இல்லாமல் தண்டனை வழங்க படவேண்டும் அபோழுதுதான் இது போன்ற கொடுமைகள் மீண்டும் நடை பெறாமல் தடுக்கப்படும் ..வேதனையான நிகழ்வுகள் மறக்க படவேண்டிய காயங்கள்
ReplyDelete